அறத்துப்பால் ----------- I பாயிரவியல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து (In Praise of the Lord) 1. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு. எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. A is the starting-point of the world of sound: even so is the Ancient One Supreme the starting-point of all that exists. 2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? Of what avail is all thy learning if thou worship not the holy feet of Him of the perfect intelligence? 3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர். இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். Behold the man who taketh refuge in the sacred feet of Him who walked on flowers: his days will be many upon the earth. 4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. Behold the men who cleave unto the feet of Him who is beyond preference and beyond aversion: the ills of life touch them not ever. 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. Behold the men who sing earnestly the praises of the Lord: they will be freed from the pain-engendering fruits of action both good and evil. 6. பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். Behold the men who follow the righteous ways of Him who burned away the desires of the five senses; their days will be many upon the earth. 7. தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. They alone escape from sorrow who take refuge in the feet of Him who hath no equal. 8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது. அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது. The stormy seas of wealth and sense delights cannot be traversed except by those who cling to the feet of the Sage who is the Ocean of Righteousness. 9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். Worthless indeed like the organs of sense which do not perceive is the head that boweth not at the feet of Him who is endowed with the eight attributes. 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. They alone cross the ocean of births and deaths who take refuge in the feet of the Lord: the others traverse it not. அறத்துப்பால் ----------- I பாயிரவியல் அதிகாரம் - வான் சிறப்பு (In Praise of the Rain) 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்க்ளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும். It is the unfailing fall of rain that sustaineth the earth: look thou therefore upon it as very amrita - the drink immortal of the gods. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும். Every good that is sweeth to the taste is the gift of rain to man: and itself also formeth part of his food besides. 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். If rain should fail, famine would rage over the wide earth even though it is encircled by the ocean. 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப்பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழமாட்டார். Husbandmen would cease to ply the plough if the fountains of the heavens are dried up. 15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. பெய்யாமல் வாழ்க்கை கெடுக்கவல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். It is rain that ruineth, and it is rain again that setteth up those that hath ruined. 16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஒரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. Even grass will cease to grow if the showers from above should cease to fall. 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின். மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the might ocean would reek with corruption if the heavens should cease to suck its waters and render them back to it. 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. Sacrifices will not be offered to the Gods, nor feasts be celebrated on earth, if the heavens should be dried up. 19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின். மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும். Neither Charity nor Tapas will abide on the wide earth if the heavens should hold back their showers. 20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழக்கமும் நிலைபெறாமல் போகும். Nothing on earth can go on without water: that being so, the conduct of even the most virtuously minded of men dependeth ultimately on rain. அறத்துப்பால் ----------- I பாயிரவியல் அதிகாரம் - நீத்தார் பெருமை (The Greatness of those who have renounced the world) 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும். Behold the men who have renounced sense-enjoyments and live a life of discipline: the scriptures exalt their glory above every other good. 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது. Thou canst not measure the greatness of the men of renunciation: thou canst as well count the number of the dead. 23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. பிறப்பு வீடு என்பனபோல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற் கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. Behold the men who have weighed this life with the next and have renounced the world: the earth is made radiant by their greatness. 24. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்எனும் வைப்பிற்குஓர் வித்து. அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். Behold the man whose firm will controlleth his five senses even as the goading hook controlleth the elephant: he is a seed fit for the fields of heaven. 25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி. ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். Dost thou desire to know the power of the saint who hath quenched the cravings of the his five senses? Look on the King of the Gods, Indra: his one example is enough. 26. செயற்கரிய செய்வார் பெரியார்; சிறியர் செயற்கரிய செய்கலா தார். செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். The great ones are they who can achieve the impossible: the feeble ones are those who cannot. 27. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். Behold the man who appreciateth at their true value the sensations of touch and taste and sight and sound and smell: he will command the world. 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். The scriptures proclaim the greatness of the men of the might word. 29. குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியார், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். It is impossible to support even for a moment the wrath of those who stand on the rock of renunciation. 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். Men of renunciation are divinities because of their compassion to creatures. அறத்துப்பால் ----------- I பாயிரவியல் அதிகாரம் - அறன் வலியுறுத்தல் (The Glorification of Righteousness) 31. சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு? அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது? Righteousness leadeth unto heaven and it bringeth wealth also: then what is there that is more profitable than Righteousness? 32. அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மை யானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை. There is no greater good that Righteousness, nor no greater ill that the forgetting of it. 33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல். செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம், அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். Be thou unremitting in the doing of good deeds: do them with all thy might and by every means. 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற. ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்கவேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Be pure in heart: all righteousness is contained in this one commandment: all other things are nought by empty display. 35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும். Avoid envy and greed, anger and harsh words: that is the way to acquire righteousness. 36. அன்றுஅறிவாம் என்னாது அறஞசெய்க மற்றுஅது பொன்றும்கால் பொன்றாத் துணை. இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். Say not in they heart, I shall be righteous by and by, but begin to do good works without delaying: for it is Righteousness will be thy undying companion on the day of thy death. 37. அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. பல்லக்கைச் சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. Ask me not, What will it profit a man if he is righteous? Look at the bearer of the palanquin and him that rideth on it. 38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் வாழநாள் வழியடைக்கும் கல். ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். If thou do good all thy life without a single wasted day, thou wallest up the road that ladeth unto future births. 39. அறத்தான் வருவதே இன்பம்; மற் றெல்லாம் புறத்த; புகழும் இல. அறநெறியில் வாழ்வதன் பயனாக வருிவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. They alone are joys which flow from a virtuous life: all other pleasures end but in disgrace and sorrow. 40. செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு உயற்பால தோரும் பழி. ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யததக்கது அறமே. செய்யாமல் காத்துக்கொள்ளத் தக்கது பழியே. That action alone is worth doing which is based on righteousness: and all action must be shunned which will subject thee to the reproof of the wise. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - இல்வாாழ்க்கை (The Life of the Householder) 41. இல்லாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். The householder is the mainstay of all who follow the three other paths of life. 42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான். The householder is the friend of the pitris and the destitute, and of those who have renounced the world. 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். Five are the duties of the householder, namely, the offering of oblations to the pitris, the performance of sacrifices to the Gods, the doing of hospitality, the rendering of help unto relations, and the looking after of one's own self. 44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. Behold the man who feareth the reproof of the wise and doth charity before eating his meal: his seed decayeth never. 45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழக்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். If love aboundeth in the home and righteousness doth prevail, the home is perfect and its end is all fulfilled. 46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன? If a man fulfilleth aright the duties of the householder, where is the need for him to take up other duties? 47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன் - வாழ முயல்கின்றவன் பல திறத்தாாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான். Among those that seek after salvation, the greatest are they who lead a virtuous family life, performing alright all the duties that belong to it. 48. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. மற்றவரையும் அறநெறியில் ஒழகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும். Behold the householder who helpeth others in the abservance of their vows and who leadeth a virtuous life himself: he is a greater saint than those who betake themselves to a life of fasting and prayer. 49. அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல் வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும். Righteousness belongeth especially to the married life: and a good name is its ornament. 50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான். The householder who liveth as he ought to live will be looked upon as a god among men. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம் (The Blessings of a good helpmate) 51. மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத்துணை ஆவாள். She is the god helpmate who possesseth every wifely virtue and spendeth not above her husband's means. 52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. All other blessings turn to nought if the wife faileth in wifely virtues. 53. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? Where is indigence if the wife is worthy? and where is wealth if worth is not in her? 54. பெண்ணின் பெருந்தக்க யாவுள் கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? What is there that is greater than woman, when she is strong in the strength of her chastity? 55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்! Behold the woman who worshippeth not the Gods, but worshippeth her husband even as she riseth from bed: the rain cloud obeyeth her commands. 56. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலான் பெண். கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். She is the good housewife who guardeth her virtue and her reputation, and tendeth her husband with loving care. 57. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது. Of what avail is close confinement? It is her own continence that is the best guardian of a woman's virtue. 58. பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாாழும் உலகு. கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர். Behold the woman who hath begotten a (worthy) son: her place is high in the world of the gods. 59. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை. Behold the man whose home beareth not an honourable reputation: the proud, lion-like walk in the sight of detractors is denied to him. 60. மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர். The chiefest blessing is an honourable home: and its crowning glory is worthy offspring. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - மக்கட்பேறு (Offspring) 61. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற. பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை. We know of no blessing so great as the begetting children that are endowed with understanding. 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால், ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. Behold the man whose children bean an unstained charater: no evil will touch him up to his seventh reincarnation. 63. தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும். தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். Children are the veritable riches of a man: for they pass to him by their acts all the merits that they acquire. 64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும். Sweeter verily than ambrosia is the gruel soused and and spattered by the tender hands of one's own children. 65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும். The touch of children is the delight of the body: the delight of the ear is the hearing of their speech. 66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர். The flute is sweet and the guitar duleet: so say they who have not heard the babbling speech of their little ones. 67. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். What is the duty of the father to his son? It is to make him worthy to sit in the front rank in the assembly. 68. தம்மின்பதம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். It is a joy to every man to find himself eclipsed in intelligence by his children. 69. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்றகாலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள். Great is the joy of the mother when a man child is born unto her: but greater far is her delight when she heareth him called worthy. 70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, 'இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ' என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். What is the duty of the son to his father? It is to make the world ask, For what austerities of his hath he been blessed with such a son? அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - அன்புடைமை (Love) 71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலதும் அறிய வெளிப்படுத்திவிடும். Where is the bar that can close in the gates of love? The gentle tear-drops that form themselves in the eyes of lovers are sure to proclaim its presence. 72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். Those that love not live only for themselves: as to those that love, they will give their very bones for helping others. 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாத்க்கையின் பயன் என்று கூறுவர். They say it is to taste again of love that the soul hath consented once more to be encased in bone. 74. அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எர்ரோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். Love maketh the heart tender towards all: and tenderness yieldeth that priceless treasure called friendship. 75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர். The blessings of the blessed, they say, is nothing but a reward of the gods for a nature that had been full of loving-tenderness in the past. 76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது. They are fools who say that love is for the righteous alone: for even against the evil-minded love is the only ally for a man. 77. என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம். எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். Behold how the sun burneth the boneless worm: even so doth Righteousness burn the man that doth not love. 78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. Behold the man whose hear knoweth not what love is: he will know prosperity only when the sapless tree of the desert putteth forth leaves. 79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்? Of what avail is a lovely outside, if love, the soul's ornaments, hath no place in the heart? 80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும். The seat of life is in Love: the man who hath it not is only a mass of skin-encased bone. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - விருந்தோம்பல் (Hospitality) 81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு. வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடக்கதுவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டேஆகும். What for do the wise toil and set up homes? It is to feed the guest and help the pilgrim. 82. விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று. விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத்தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. Were it even the draught of immortality, it shall not be tasted alone when the guest is in the hall. 83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. No evil can befall the man who never faileth to honour the incoming guest. 84. அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகீழ்ந்து திருமகள் வாழ்வாள். Behold the man who receiveth the worty guest with his best smile: Lakshmi delighteth to abide in his home. 85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி மிச்சல் மிசைவான் புலம்? விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமா? Behold the man who feedeth his guest first and then only eateth what is left: doth his land stand in need even of sowing? 86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். Behold the man who hath tended the outgoing guest and waiteth for the incoming one: he is a welcome guest unto the Gods. 87. இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவிளதாகும். We cannot say of any hospitable act by itself, so much is the merit of this act: it is worth of the guest that is the measure of the sacrifice. 88. பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கோடு இழந்தோமே என்று இரங்குவர். Behold the man who performeth not the sacrifice of hospitality: he will say one day, I have toiled hard and laid me up a great treasure: but it is all in vain, for there is none to comfort me. 89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை; மடவார்கண் உண்டு. செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது, விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். Not to honour the pilgrim is veritable indigence in the midst of wealth: such a thing is to be found only with fools. 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர். The anitcha flower fadeth when thou holdest it near the nose and smellest it: but a mere reluctant look is enough to break the heart of the guest. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - இனியவை கூறல் (Kindness of Speech) 91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும். The speech that is truly kind is the speech of the righteous man which is full of tenderness and free from dissimulation. 92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொக்கும் ஈகையைவிட நல்லதாகும். Better even than a generous gift is sweet speech and kind and gracious look. 93. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொ லினதே அறம். முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். Behold the sweet and gracious look and the kind speech that cometh from the heart: Righteousness hath its dwelling place there. 94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும். Behold the man who always speaketh sweet words whosoever it be to whom he speaketh: Poverty, the increase of sorrow, will never come near him. 95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி;அல்ல மற்றுப் பிற. வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும்; மற்றைய அணிகள் அணிகள் அல்ல. Modesty and loving speech, these alone are ornaments to a man, and none other. 96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும். Sinfulness will wane away and righteousness will increase if thy thoughts are good and they speech is kind. 97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும். The word that is serviceable an kind createth friends and bringeth forth benefits. 98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். Words that are kind are removed from all littleness yield good in this life and in the next also. 99. இன்சொல் இனிதுஈன்றும் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ? How doth a man continue to use violent words, even after he hath felt the pleasure that kind words give? 100. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. இனிய சொள்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான் சொற்களைக் கூறுவது கனிகள் இருக்கும் போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது. Behold the man who useth hard words when sweet ones serve: he preferreth the unripe fruit to the ripe. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - செய்ந்நநன்றி அறிதல் (Gratitude) 101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்குப் பிறன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. Behold the kindness done without any obligation: even the heavens and the earth are too poor to repay it. 102. காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரிதாகும். A kindness done in the hour of need may look small: but it outweigheth the whole world. 103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். Behold the kindness done without thought of recompense: the ocean will look small when compared with its worth. 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். The benefit received may small even like a thiny millet: but in the eys of the worthy its measure is that of a mighty palmyra tree. 105. உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். Gratitude is not to be measured merely by the measure of the assistance given: its measure is alone the nobility of him that receiveth the benefit. 106. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது; துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. Forget not the friendship of the holy ones: nor forsake those that succoured thee in thy difficulty. 107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். The worthy will remember with gratitude even unto their seventh reincarnation those that succoured them in their need. 108. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும். It is ignoble to forget a kindness: but an injury received, it is the part of nobility to forget at once. 109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். முன் உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். The mortallest injury is forgiven the moment the mind recalleth a single kindness received from the injurer. 110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. There is redemption for men who are guilty of every other crime: but the ungrateful wretch shall know of none. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - நடுவுநிலைமை (Uprightness of Heart) 111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்து ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும். The Alpha and the Omega of righteous life is propriety: and propriety requireth that thou must give each man his due, whether he be a stranger, or a friend, or an enemy. 112. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. நடுவுநிலைமை உடையவளின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறிதியான நன்மை தருவதாகும். The prosperity of the just groweth not less; it endureth even unto their remotest posterity. 113. நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். Though nought but profit come of it, touch not the wealth that cometh by deviating from the right. 114. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்ப படும். நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கும் பின் எஞ்சிநிறிகும் புகழாலும் பழியாலும் காணப்படும். The worthy and the unworthy are known by their offspring. 115. கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். Evil and good come unto all: but his upright heart is the glory of the man of worth. 116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று ஒருவன் அறிய வேண்டும். When heart swerveth from the right and turneth unto evil, know that thy destruction is near at hand. 117. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம். The world looketh not down on the poverty of the upright and virtuous man. 118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். Behold the weighing beam, for it is straight in itself and weigheth justly: the glory of the wise is to be like unto it and to incline neither to this side nor to that. 119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம். Verily the upright speech coming out of a man's mouth is a judgement, provided that he swerveth not at all from the right in his heart. 120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். பிறர் பொருளையும் தம்பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். Behold the business man that looketh after the interests of others as his own: his business will expand. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - அடக்கம் உடைமை (Self-control) 121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல். பொல்லாத இருற்போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும். Self-control leadeth unto heaven, but uncontrolled passion is the royal road to endless darkness. 122. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட் ஆக்கம் உயிர்க்கு இல்லை. Guard thy self-control as a very treasure: life hath no richer wealth here below. 123. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். Behold the man who rateth the things of this world at their true value and liveth a life of self-control: wisdom and every other blessing will come unto him. 124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு; மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும். Behold the man, who hath triumphed over his passions and who swerveth not from duty: his form is more imposing than a mountain. 125. எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். Humility is beautiful in all men: but alone on the rich doth it shine in all its splendour. 126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. Behold the man who can draw in into himself his five senses even as the tortoise doth its limbs: he hath laid up for himself a treasure that will last even unto his seventh reincarnation. 127. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். Whatever else thou rein not in, rein in thy tongue: for an unbrided tongue will utter foolish things and will lead thee unto grief. 128. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகா தாகி விடும். தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும். If even one word of thine causeth pain to another, all they virtue is lost. 129. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. The burn caused by fire healeth in its time: but the wound burned in by the tongue remaineth a running sore for ever. 130. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்க முடையவனாக இருக்க வல்லவனுடய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும். Behold the man who hath learned wisdom and self-control and who alloweth not anger to harbour in his heart: Righteousness pilgrimageth to his home in order to have a sight of his face. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - ஒழுக்கம் உடைமை (Purity of Conduct) 131. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும். The man whose conduct is pure is honoured by all: purity of conduct is therefore to be prized even above life. 132. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. ஒழுக்கத்தை வருநிதியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். Watch anxiously over thy conduct: for wheresoever thou mayest search thou canst not find firmer ally than right conduct. 133. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப் பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். A pure life bespeaketh an honourable family: but low conduct placeth a man amongst the ignoble. 134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக்கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். Even the Vedas if forgotten can be learned again: but once fallen from virtuous conduct the Brahman is fallen from his place for ever. 135. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். Prosperity is not for the envious: even so dignity is not fo rmen of impure conduct. 136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவிலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். The firm-minded swerve not from virtuous conduct: for they know the evils brought on by such swerving. 137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். The man of right conduct is honoured among men: but ignominy alone is the portion of those who fall therefrom. 138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். Purity of conduct soweth the seed of prosperity: but an evil course is the mother of endless ills. 139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும். Foul words can never fall from the lips of the well-bred even when off their guard. 140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். Fools may be as instructed as thou pleasest: but they never learn to conform to the ways of the Righteous. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - பிறனஇல் விழையாமை (Non-desiring of another man's wife) 141. பிறன்பொருளாள் பெட்டிஒழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. Behold the men whose eyes are turned towards righteousness and towards wealth: they commit not the folly of desiring another man's wife. 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன்மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை. Among those that have fallen from virtue there is no greater fool than he that haunteth the threshold of another. 143. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம்கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். Verily they are in the jaws of death who invade the home of an unsuspecting friend. 144. எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்? Let a man be ever so great: what availeth it all if he committeth adultery without thinking ever so little of the shame that floweth therefrom? 145. எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான். Behold the man who hangeth on to his neighbour's wife because she is accessible: his name is sullied for ever. 146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண். பகை பாவம் அச்சம் பழி என்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன்மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். The adulterer knoweth no respite from four things, hatred, sin, fear and shame. 147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன். அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே. He is the righteous householder whose heart is not attracted by the charms of his neighbour's wife. 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும். Behold the high-souled man that looketh not on another's wife: he is more than righteous: he is saintly. 149. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார். கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவரின் தோளைப் பொருந்தாதவரே ஆவர். Who on earth deserve all the good things of the world? It is they who clasp not the arms of her who belongeth to another. 150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. Though thou shouldst transgress and yield to every other sin, abstain at least from the sin of adultery: that abstention will bring thee credit. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - பொறை உடைமை (Forgiveness) 151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். The earth supporteth even those that dig into her entrails: even so bear thou with those that traduce thee: for that is greatness. 152. பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது. Forgive thou always the injuries that other may do thee: but if thou forget them it were even better. 153. இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். The most shameful poverty is the refusal of hospitality: and the greatest strength is to bear with the dullness of fools. 154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். If thou wantest to be grand always, cultivate with patience the habit of forgiving other's transgressions. 155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். The wise think not much of the men who retaliate an injury: but they are prized as gold who forgive their enemy. 156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. The joy of revenge lasteth but a day: but the glory of him who forgiveth endureth for ever. 157. திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனஅல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. Let the wrong suffered be ever so great: the better part is not to take it to heart and to abstain from revenge. 158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும். Conquer by thy nobility those that in their pride have injured thee. 159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்வர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். More saintly than even those that have renounced are they that bear with the bitter tongue of their detractors. 160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். Those that do penance by fasting are great: but they only come after those that forgive their calumniators. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - அழுக்காறாமை (Non-envying) 161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். Know that thy heart is inclining towards virtue when thou findest that it is free from all feelings of envy. 162. விழுப்பேற்றின் அஃதஒப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப்பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. No blessing is so great as a nature that is free from all envy. 163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். It is he that careth not for virtue or for wealth that envieth his neighbour's prosperity instead of rejoicing at it. 164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர். The wise injure not others through envy: for they know the evils that result from entertaining that mean feeling. 165. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது. பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்குசெய்யத் தவறினாலும் தவறாமல் கேட்டைத் தருவது அது. Envy itself is scourge enough for the envious man: for, even if his enemies spare him, his own envy will work his ruin. 166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். Behold the man that beareth not to see gifts made to another: his family will beg for very food and clothing and perish. 167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். Lakshmi cannot bear with the envious: She will quit their side, leaving them to the care of her elder sister. 168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும். Caitiff envy bringeth on indigence and leadeth up to the gates of hell. 169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை. The affluence of envious and the misery of the generous-minded are alike matter for wonder. 170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. Never hath envy led to prosperity: nor a generous heart to a fall therefrom. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - வெஃகாமை (Non-coveting) 171. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்பொழுதே வந்து சேரும். Behold the unscrupulous man who coveteth another man's wealth: his wickedness will increase and his family will decline. 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். Behold the men that turn away from evil: they covet not, neither do they yield to ignoble deeds. 173. சிற்றின்பம் வெஃகி அறனஅல்ல செய்யாரே மற்றுஇன்பம் வேண்டு பவர். அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். Behold the men that care for other joys: they are not greedy after little delights, nor do they yield unto inequity. 174. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், 'யாம் வறுமை அடைந்தோம்,' என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். Behold the men that have mastered their senses and enlarged their vision: they covet not saying, Lo, we are in want. 175. அஃகி அகன்ற அறிவிஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன? Of what avail is a mind that is subtle and comprehending, if it yieldeth unto greed and consenteth unto insensate deeds? 176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். அருளை விிரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். Even he who hungereth after grace and walketh in the Path will perish if he hankereth after wealth and plotteth evil. 177. வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின் மாண்டற் அரிதாம் பயன். பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பா திருக்கவேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப் பயன் நன்மையாவது அரிதாகும். Covet not the wealth that greed gathereth: for its fruit is bitter in the day of enjoyment. 178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். If thou desire that thy substance should not grow less, covet not the riches in they neighbour's hands. 179. அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். Behold the wise man that understandeth justice and coveteth not: Lakshmi knoweth his worth and seeketh him in his home. 180. இறல்ஈனும் எண்ணாது வெஃகின்; விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழியைத் தரும்; அப் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும். The greed that looketh not beyond engendereth destruction: but the greatness that sayeth, I desire not, triumpheth over all. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - புறங்கூறாமை (Refraining from slander) 181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது. Behold the man who doth iniquity and who would not so much as even utter the name of righteousness: it is sweet even unto him i fmen say, Lo, here is one who backbiteth not. 182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப்பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும். It is wrong to turn away from good and do evil: but it is far worse to smile before and vilify behind. 183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல், அறநூல்கள் செல்லும் ஆக்கத்தை தரும். It is worthier to die at once than live by lying and slander: for such a death bringeth with it the fruits of righteousness. 184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின்விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. Slander not a man behind his back even though he hath insulted thee to thy very face. 185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும். The lips may speak righteousness: but a slanderous tongue betrayeth the meanness of the heart. 186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான். If thou slander another, he will look into thy own transgressions and expose the worst of them. 187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர். Behold the men who delight in slander: they know not the sweet are of making friends, and will drive away from themselves even their old friends disgusted. 188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றம் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ? Those that love to speak abroad the transgressions of their friends, how will they spare the transgression of their enemies? 189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோணுடைய உடல்பாரத்தை, 'இவனையும் சுமப்பதே எனக்கு அறம்' என்று கருதி நிலம் சுமக்கின்றதோ? May it be that the Earth calleth her sense of duty to her aid in supporting the weight of the backbiting slanderer? 190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ? If a man can scan his own faults as he doth those of his enemies, can evil ever come to him? அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - பயனஇல் சொல்லாமை (Refraining from vain speaking) 191. பல்லார் முனியப் பயன்இல் சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான். Behold the man that angereth his hearers by the speaking of vain words: he wil be despised of all men. 192. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. பலர்முனனே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தவை விடத் தீமையானதாகும். Worse even than injuring one's friends in the speaking of vain words before many. 193. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. ஒருவன் பயனில்லாத பொருள்களைப்பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். He that multiplieth empty words declareth loud his want of worth. 194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். Behold the man that speaketh vain words in an assembly: no profit will come unto him and all that is good will flee from his side. 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின். பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும். Even the worthy will lose honour and respect if they indulge in vain speaking. 196. பயன்இல்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி உனல். பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும். Call not him man who loveth idle words: call him rather a chaff among men. 197. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும். Let the wise, if they deem it meet, speak even hard words: but it is good for them to desist from profitless speech. 198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். அருமையான பயன்பளை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார். The wise whose thoughts are set on the solution of great problems utter no words that are not full of deep significance. 199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார். They whose eyes are whole say not vain words even by oversight. 200. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது. Speak thou only such words as are worth saying: and speak not ever words that are profitless and vain. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - தீவினை அச்சம் (Fear of evil-doing) 201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். The evil fear not the folly called sin: but the worthy flee from I. 202. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். தீயவெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும். Evil bringeth forth evil: evil therefore is to be feared even more than fire. 203. அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்ய்மலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர். The chiefest wisdom, they say, is to abstain from injury even to an enemy. 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக கேடு விளையுமாறு அறம் எண்ணும். Let not a man compass another's ruin even unthinkgly: for Justice will compass the ruin of him that plotteth evil. 205. இலன்என்று தீயவை செய்யற்க; செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 'யான் வறியவன்' என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான். Let not a man work evil saying, I am poor: for, if he do, he will sink into a lower destitution than before. 206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும். Whoso desireth not to be saddened by ills, let him abstain from doing injury to others. 207. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும். There is a way of escape from every other enemy: but ill deeds never die but pursue and destroy their author. 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று. தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. As the shadow leaveth not a man but doggeth his footsteps wheresoever he goeth, even so do evil deeds pursue their author and work his destruction. 209. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழபவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும். If a man love his own self, let him not incline his mind towards evil in any degree. 210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யா திருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம். Know that man to be secure from ills who leaveth not the straight path in order to commit wrong. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - ஒப்புரவு அறிதல் (Complaisance) 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை. The gracious expect no return when they oblige: how can the world ever repay the rain cloud? 212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். The substance gathered in by the worthy by the labour of their hands is all for other's use. 213. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாதுி. A better thing than a gracious complaisance cannot be had either here or in heaven. 214. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான். He alone liveth who knoweth what is proper: he who knoweth not what is fitting shall be classed with the dead. 215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது. Behold the village tank filled with water to its brim: like unto it is the prosperity of the wise man that loveth the world. 216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின். ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது. Like unto a fruit-tree in the middle of the village bearing fruit is riches in the hands of the man of heart. 217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. Like unto a tree that yieldeth medicinal drugs and is available to all is riches in the hands of the obliging man. 218. இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர். ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். Behold the men who know what is just and proper: they fail not to oblige others even when fallen on evil days. 219. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும். The complaisant man thinketh himself poor only when he is impotent to oblige those who solicit his aid. 220. ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும். If ruin cometh as a result of complaissance, it is worth courting even by selling one's own self into slavery. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - ஈகை (Charity) 221. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது. Giving to the poor is alone charity: all other giving is of the nature of loan. 222. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்ல்எனினும் ஈதலே நன்று. பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக கொடுப்பதே நல்லது. Though its lead unto heaven, receiving is bad: and though heaven should be denied to the giver, even then the giving of alms would be the highest virtue. 223. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுஉடையான் கண்ணே உள. 'யான் வறியவன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்குமுன் அவனுக்குக் கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு. It is only the high-born man that giveth without ever meanly saying, I have not. 224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தை காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது. The heart of the giver is not glad until he seeth the smile of content on the face of the suppliant. 225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். The conquest of conquests to the conqueror over self is the conquest over hunger: but even that conquest cometh only after the self-abnegation of him who appeaseth that hunger. 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி. வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். To fill the gnawing hunger of the poor: that is the way that the wealthy man should lay up a store for himself against an evil day. 227. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. தான் பெற்ற உணவைப் பலரோடு பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை. The evil disease called hunger toucheth not the man that divideth his breed with others. 228. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்? தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர். பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ? The hard of heart who perish their wealth by hoarding it, have not they ever tasted the delight of giving unto others? 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது. Bitterer verily than the beggar's bread is the hoarded meal of the miser eating alone. 230. சாதலின் இன்னாதது இல்லை இனிதிஅதூஉம் ஈதல் இயையாக் கடை. சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். Nothing is bitterer than death: but even death is sweet when one hath not the wherewithal to give to those who appeal for help. அறத்துப்பால் ----------- II இல்லறவியல் அதிகாரம் - புகழ் (Glory) 231. ஈதல்; இசைபட வாழ்தல்; அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. Give to the poor and add glory unto thy name: there is no greater profit for man than this. 232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். The one theme in the mouth of all that praise is the glory of those that give unto the poor. 233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல். உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்கவல்லது வேறொன்றும் இல்லை. Everything else dieth on earth: but the fame of those grand men whose achievements are unique in the annals of manking endureth for ever. 234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. Behold the man that hath won a lasting, world-wide fame: the Gods on high prefer him even before saints. 235. நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும் வித்தகர்க்கு ஆல்லால் அரிது. புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை. The ruin that addeth unto fame and the death that bringeth glory are impossible of attainment except only by men of soul. 236. தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்று வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது. Having come into the world, let a man acquire glory and fame: as to those who have not achieved fame, it is better for them not to have been born at all. 237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்? தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன? Those that are not free from blemish chafe not at themselves: why then are they wroth against their calumniators? 238. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின். தமக்குப்பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். It is a disgrace for all men if they earn not the memory called fame. 239. வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம். புகழ் பெறாமல் வாழ்க்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். Behold the land weighed down beneath the tread of an inglorious people: though famed for its wealth in the past, it will be reduced to utter poverty. 240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். They alone live who live without blemish: and they alone die who have lived without glory. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - அருளுடைமை (Mercy) 241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய வெல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயரந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். The chiefest wealth is a heart that overfloweth with mercy: for material wealth is found even in the hands of vile men. 242. நல்லாற்றாள் நாடி அருளாள்க; பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது. Follow the good Path and learn to be merciful: and if thou examine the teachings of other faiths also, thou wilt see that Mercy is the only salvation. 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. They enter not into the dark and bitter world whose heart is joined into mercy. 244. மன்னுயிர் ஓம்பி அருளஆள்வாற்கு இல்லென்ப தன்உயிர் அஞ்சும் வினை. தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. The result of actions at which the soul trembleth pursue not him who is kind and merciful to all life. 245. அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். Vexation never toucheth the merciful: the teeming air-encircled earth is a witness thereto. 246. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்துஒழுகு வார். அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர். Behold the man that hath forsaken mercy and doth inequity: though he must have suffered cruelly in past births for neglecting mercy, he hath forgotten the lesson, say the wise. 247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். The other world is not for those whose heart is incapable of pity, even as their world is not for them that are without riches. 248. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருளஅற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது. பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. The poor in substance may one day thrive and prosper: but they that lack pity are poor indeed, and their day cometh never. 249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. It is as easy for the hard of heart to do deeds of righteousness as for the confused in mind to see the Truth. 250. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. (அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்கவேண்டும். When thou art tempted to oppress this weak, call to mind how thou feltest within thyself when thou didst tremble before a stronger. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - புலால் மறுத்தல் (Abjuring of flesh-meat) 251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? How can he feel pity, who eateth other flesh in order to fatten his own? 252. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப் பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை. Thou canst not find riches in the hands of the thriftless: even so thou canst not find pity in the hearts of those that eat meet. 253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகிய அருளைப் போற்றாது. The heart of the man that tasteth flesh turneth not towards good, even as the heart of him that is armed with steel. 254. அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. The killing of animals is veritable hardness of heart: but the eating of their flesh is inequity indeed. 255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது. In non-eating of flesh is Life: if thou eat, the pit of hell will not open its mouth to let thee out. 256. தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமற் போவர். If the world desireth not meat for eating, there will be none to offer it for sale. 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். If a man can only realise to himself the agony and pain suffered by other living beings, he would not desire to eat flesh-meat. 258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார். Behold the men who have escaped from teh bonds of illusion and ignorance: they eat not the flesh from which life bath flown out. 259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. To abstain from the killing and eating of living beings is better than to perform a thousand sacrifices in the sacrificial fire. 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். Behold the man who killeth not and abstaineth from flesh-meat: all the world joineth hands to do him reverence. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - தவம் (Tapas) 261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குஉரு. தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும். Patient endurance of suffering and non-injuring of life, in these is contained the whole of tapas. 262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். Tapas is possible only for those who have acquired merity by tapas in previous births: it is profitless for others to take it up. 263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ? Is it because there should be some people to tend and feed ascetics that all the rest have neglected tapas? 264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். If thou wouldst destroy thy foes and exalt those that love thee, know that such a power belongeth unto tapas. 265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். Tapas fulfilleth all desires even in the very manner that is desired: therefore is it that men endeavour after tapas in this world. 266. தவஞ் செய்வார் தங்கருமம் செய்வார்மற்று அல்லார் அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசைவலையில் அகப்பட்டு வீண் முயறிசி செய்கின்றவரே. It is the men that do tapas that look after their own interests: the rest are caught in the snares of desire and only do themselves harm. 267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கினடறவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும். THe fiercer the fire in which it is melted, the more brilliant becometh the lustre of the gold: even so, the severed the sufferings endured by the austere in the performance of their tapas, the purer their nature shineth. 268. தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். Behold the man who hath attained mastery over himself: all other men worship him. 269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையுறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும். Behold the men that have acquired power by austerities: they can succeed even in conquering death. 270. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். If the needy are the many in the world, it is because those that do tapas are few, and those that do not, form the larger number. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - கூடா ஒழுக்கம் (Imposture) 271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்துநிற்கும் ஐந்துபூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். The five principles of his own body smile within themselves when they see the imposture of the hypocrite. 272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்?. தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்? Of what avail is an imposing presence when evil is in the heart and the heart is conscious thereof? 273. வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற் கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு பயிரை மேய்நதாற் போன்றது. Behold the man who hath not attained mastery over himself putting on the puissant look of the austere: he is like a cow that grazeth about wearing a tiger's skin. 274. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது. Behold the man who taketh cover under a saintly garb and doth evil: he is like a fowler hiding in the bush and decoying birds. 275. பற்றுஅற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றுஎற்றுஎன்று ஏதம் பலவும் தரும். 'பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், 'என்ன செய்தோம் என்ன செய்தோம்' என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும். The hypocrite pretendeth unto sanctity and sayeth, I have vanquished my passion: but he will come to grief and cry, What have I done! Oh, what have I done! 276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப்போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை. Behold the man that hath not renounced in his heart, but walketh about like one that hath renounced, and cheateth men: thou canst not find a more unscrupulous villain than him. 277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கில் கரியார் உடைத்து. புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. The kunri seed is fair on one side, but the other side of it is black: there are men who are like unto it: they are fair on the outside, but their inside is all foul. 278. மனத்தது மாசுஆக மாண்டார்நீ ராடி மறைந்துஒழுகு மாந்தர் பலர். மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல் நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர். Many there be whose heart is impure but who bathe in holy streams and prowl about. 279. கணைகொடிது; யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். நோகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும். The arrow is straight but thrists for bloood, while the lute that hath a bend radiates harmony around: judge thou therefore men by their acts and not by their appearance. 280. மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்தது ஒழித்து விடின். உலகம் பழிக்கும் தியொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா. Neither matted hair thou wantest nor shaven head, if thou abstain from that which the world condemneth. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - கள்ளாமை (Abstaining from fraud) 281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. பிறரால் இபழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும். Whoso wanteth not to be held in contempt, let him guard himself against every thought of fraud. 282. உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், 'வஞ்சித்துக் கொள்வோம்' என்று எண்ணாதிருக்க வேண்டும். It is a sin even to say in one's heart, I shall cheat my neighbour of his substance. 283. களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து ஆவது போலக் கெடும். களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல் தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும். The fortune that is built up by fraud may appear to thrive: but it is doomed for ever. 284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலை யாத துன்பத்தைத் தரும். The thirst for plunder leadeth in its season to endless grief. 285. அருள்கருதி அன்புடையா ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை. Behold the man that coveteth other men's substance and lieth in wait to catch them napping: he thinketh not of grace and love is far from his heart. 286. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர். அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுகமாட்டார். The man who thirsteth after plunder cannot weigh things aright: nor can he walk in the way of righteousness. 287. களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை. Behold the man that hath weighed the things of this world and made his heart firm: he committeth not the folly of cheating his neighbour. 288. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும். As Righteousness resideth in the heart of him who valueth things aright, even so Deceit hath its seat in the heart of the thief. 289. அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித் தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர். Behold the man who meditateth on nothing but fraud and deceit: he will leave the right path and perish. 290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவருலகும் வாய்க்கத் தவறாது. He that deceiveth others is not master even of his own body: but the world of the Gods itself is a neverfailing inheritance unto those that are upright. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - வாய்மை (Truthfulness) 291. வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல். வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும். What is truthfulness? It is the speaking of that which is free from even the slightest taint of evil. 292. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால், பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம். Even falsehood is of the nature of truth if it bringeth forth unmixed good. 293. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். Hold not forth as truth what thou knowest to be false; for thy own conscience will burn thee when thou hast lied. 294. உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால். அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான். Behold the man whose heart is free from every trace of falsehood: he reigneth in the hearts of all. 295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை. ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன். Behold the man whose heart is fixed in truthfulness: he is greater than the austere and greater than he that maketh gifts to the poor. 296. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும். ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். There is no greater renown for a man than the renown that he is a stranger unto falsehood: such a man acquireth every virtue without mortifying the body. 297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும். If a man can live without ever uttering a falsehood, all other virtues are superfluous unto him. 298. புறம்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல, அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். Water cleanseth but the outward form: but the purity of the heart is proved by truthfulness. 299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே ஆகும். The worthy regard not all other light as light: it is only the light of truth that they look upon as a veritable illumination. 300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. யாம் உண்மையாக்க கண்ட பொருள்களுள், வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை. Many things have I seen in this world: but of all the things that I have seen, there is nothing that is higher than truth. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - வெகுளாமை (Abstaining from anger) 301. செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்? பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? A man can be said to forbear only when he hath the power to strike and striketh not: where he hath not the power, what mattereth if whether he forbeareth or forbeareth not? 302. செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. It is wrong to get angry even when thou art helpless to strike: and when thou hast the power, there is nothing that is worse than anger. 303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். யாரிடத்திலும் சினங் கொள்ளமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும். Whoever thy offender may be, forget thy anger: for from anger spring a multitude of ills. 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற? முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ? Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger? 305. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும். If thou want to look after thyself, keep off from choler: for if thou keep not off, it will come upon thee and destroy thy own self. 306. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். Choler destroyeth every man whom it approacheth: and it burneth also the family of him who nurseth it. 307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும். He who nurseth his rage as if it were a precious thing is like unto the man who dasheth his hand against the ground: the hand of this man escapeth not from injury, and the destruction of the first is as certain. 308. இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. Even when thy wrongs burn as the flaming of many fires, it is good if thou canst abstain from anger. 309. உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணா திருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். All the desires of a man will be fulfilled on the instant if from his heart he banish anger. 310. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். Whoso is overwhelmed with anger is like one dead: but whoso hath forsworn wrathfulness is like unto the saints. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - இன்னா செய்யாமை (Non-injuring) 311. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள். சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யா திருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். The man who is pure in heart would not injure others even if he could obtain a princely estate thereby. 312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள். ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். Even when another hath injured him in his hate, the man who is pure in heart returneth not the injury. 313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும். If thou injure another, even though it be only a man who hath injured thee without any provocation, thou simply bringest down upon thyself evils that can never be remedied. 314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும். How shall a man punish them that have injured him? Let him do them a good turn and make them ashamed in their hearts. 315. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை? மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காபடபாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ? Of what avail is intelligence to a man if he doth not feel as his very own the pain suffered by other beings and so feeling doth not abstain from injuring any? 316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும். When a man hath felt a pain for himself, let him take care that he inflicteth it not on others. 317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம் மாணாசெய் யாமை தலை. எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது. It is a great thing, if thou injure not knowingly any man, at any time, and in any degree. 318. தன்உயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாவோ? He who hath felt what pain meaneth to himself, how doth he bring himself to inflict it on others? 319. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும். If a man injureth his neighbour in the forenoon, evil will come to him in the afternoon of its own accord. 320. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன; ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார். All evil recoileth on the head of the wrongdoer: they abstain therefore from wrong-doing who desire to be immune from ills. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - கொல்லாமை (Non-killing) 321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். The greatest of virtues is non-killing: killing bringeth in its train every other sin. 322. பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொடுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். To divide one's bread with the needy and to abstain from killing: these are the greatest of all the commandments of all the prophets. 323. ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த் நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது. The greatest virtue of all is non-killing: truthfulness cometh only next. 324. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். What is the good way? It is the pain that taketh thought how it may save even the smallest of creatures from being killed. 325. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். Among all those that have renounced family life with its fears of ill, the chiefest is he that reverenceth all life for fears of killing any. 326. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணும் கூற்று. கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். Behold the man who hath taken the vow of non-killing: Death that eateth away all life maketh no inroads into his days. 327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. Take not away from any living thing the life that is sweet unto all, even if it be to save thine own. 328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும். They may say, Sacrifices gain for a man many blessings: but to the pure in heart the blessings that are earned by killing are an abomination. 329. கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர். Those who live by slaying are likened by the discriminating to eaters of carrion. 330. உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். Behold the beggar whose putrid body is festering with ulcerous sores: he must have been a shedder of blood in the past, say the wise. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - நிலையாமை (The vanity of all things) 331. நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும் புல்லறி வாண்மை கடை. நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல், வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். There is no greater folly than the infatuation that looketh upon the transient as if it were everlasting. 332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. The crowd that assembleth to witness a village show, that is the symbol of great riches flowing on a man: and the dispersal of the same crowd is the type of its passing away. 333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். Prosperity is transient: if thou have come by it, delay not to do things that are of lasting good. 334. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளஅது உணர்வார்ப் பெறின். வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது. Time looketh like an innocent thing: but verily it is a saw that is continually sawing away the life of man. 335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச்செயல் விரைந்து செய்யத்தக்கதாகும். Make haste to do good works before the tongue is paralysed and hiccough ariseth in the throat. 336. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம். But yesterday a man was and today he is not: that is the wonder of wonders in this world. 337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள். Man knoweth not if he shall last the next minute: but his thoughts are more than ten million. 338. குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. The fledgling abandoneth the broken shell of the egg and flieth away: that is the symbol of the love between the soul and the body. 339. உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. Death is like unto a sleep: and life is like the waking after that sleep. 340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு? (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? Hath the soul no fixed him of its own, that is seeketh a lodging in this worthless body? அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - துறவு (Renunciation) 341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. Whatsoever thing a man hath renounced, from the grief arising from that hath he liberated himself. 342. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்கவேண்டும்; துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. If thou want joy, renounce early: for many are the delights that thou shalt enjoy after renouncing. 343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள் களை எல்லாம் ஒருசேர விடல்வேண்டும். Crush thou the five senses: and everything in which thou takest delight, give up utterly. 344. இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. தவன் செய்சதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்; பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். To possess nothing, that is the law of the man of vows: the possession of even one thing is a coming back to the snares that he hath left. 345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை? பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ? To those that desire to put an end to their reincarnations, even the body is a superfluity: how much more then are other bonds? 346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். The feelings of I and Mine are nought but vanity and pride: he who crusheth them entereth a higher world than the world of the Gods. 347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. Behold the man who holdeth on to attachments and giveth not them up: Care and Sorrw will take hold of him and will not give him up. 348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர்; அவ்வாறு துறக்காத மற்றவர், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். They that have renounced utterly are on the path to salvation: but the others are caught in a snare. 349. பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும். The moment that attachments are broken, that very moment reincarnations cease: the man who breaketh them not continueth in vanity. 350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைமட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். Attach and tie thyself to Him who hath conquered all attachments: bind thyself firmly to Him in order that all thy bonds may be broken. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - மெய் உணர்தல் (Realization of the truth) 351. பொருளஅல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும். Behold the delusion that taketh vanities for the Reality: it bringeth the soul again into this world of sorry. 352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு. மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமைையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும். Behold the man who hath freed himself from delusion and whose vision is unclouded and clear: darkness ceaseth for him and joy cometh unto him. 353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ் வுலகைவிட, அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். Behold the man who hath freed himself from doubts and who hath realised the Truth: heaven is nearer to him than earth. 354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்உணர்வு இல்லா தவர்க்கு. மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்துபுலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் கயன் இல்லை. Though risen to human birth, the soul hath profited nothing if it hath not realised the Truth. 355. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய் யுணர்வாகும். To separate the true from the false in everything, whatever its nature may be, that is the part of a wise understanding. 356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி. கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவார். Behold the man who hath studied deeply and hath realised the Truth: he will enter the path that leadeth not again into this world. 357. ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா. Verily those that have meditated upon and attained to the Truth need not think at all of future incarnations. 358. பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு. பிறவித் துன்பத்திற்குக் காரணமாக அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. He is the wise man who endeavoureth after Perfection and Truth in order that he might escape the folly of being born again. 359. சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய். எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா. Behold the man who understandeth the means of his salvation and laboureth to conquer all attachments: the ills that he is yet to suffer depart from him. 360. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். விருப்பு, வேறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்பள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால், துன்பங்கள் வாராமற் கெடும். All suffering ceaseth for a man when he hath conquered utterly desire, anger and delusion. அறத்துப்பால் ----------- III துறவறவியல் அதிகாரம் - அவா அறுத்தல் (The killing of desire) 361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர். Desire is the seed that yieldeth unto every soul, and always, a neverfailing crop of births. 362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும். ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். If thou must need long for anything, long for freedom from reincarnation: and that freedom will come to thee if thou long to conquer longing. 363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதுஒப்பது இல். அவா அற்று நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை. There is no greater wealth here below than desirelessness: and even in heaven thou canst find no treasure that equalleth it. 364. தூஉய்மை என்பது அவாவின்மை மற்றுஅது வாஅய்மை வேண்ட வரும். தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாகிருந்தலே யாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப் பொருளை விரும்புவதால் உண்டாகும். Purity is nought but freedom from desire: and this freedom is achieved by yearning after perfect truthfulness. 365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லார். It is those that have conquered their desire that are called the liberated ones: the others appear to be free but they are verily in bondage. 366. அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில், ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே. If thou love righteousness, flee from desire: for desire is a snare and a disappointment. 367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும். If a man crusheth utterly all desire, salvation will come to him by any path that the commandeth to it. 368. அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும். அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும். He that hath no desires hath no grief: but ills on ills descend on the man that hankereth after things. 369. இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ் வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும். Even here a man shall have everlasting joy if he killeth that greatest misery of all, desire. 370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்பவாழ்வைத் தரும். Desire is never killed: but if a man giveth it up truly he attaineth perfection even at the very moment of giving it up. அறத்துப்பால் ----------- IV ஊழியல் அதிகாரம் - ஊழ் (Destiny) 371. ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். Resolution cometh to a man when Fortune is about to smile on him: but Indolence appeareth when Fortune is about to leave. 372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதையாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும். Evil fate dulleth the faculties: but when Fortune is about to smile on a man, she first expandeth his intelligence. 373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். ஒருவன் நுட்பமான நூல் பலவற்றை கற்றாலும், ஊழிற்பு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும். What doth learning avail and all subtleties? When Destiny driveth, it is the native blindness that prevaileth over all. 374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு. The world falleth into two categories that are mutually exclusive: for success in life is one thing and saintliness quite another. 375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. வெல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தியவை நல்லவை ஆதலும் உண்டு. When the tide is against thee even good things turn to evil: and even evil things turn to good when the tide is on. 376. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா. What Destiny denieth thou canst not keep even with the utmost care: and even if thou throw them away wilfully the things that are thine will not go away from thee. 377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது. Even the man who hath amassed ten million cannot enjoy his riches except as the Ordainer hath ordained. 378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர். Verily the destitute poor would turn their hearts toward renuncation but that Destiny reserveth them for the miseries that are their portion. 379. நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால் அல்லற் படுவது எவன்? நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர். தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ? They that rejoice when good cometh, why should they fret when they encounter evil? 380. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும். ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும். What is there that is mightier than Destiny? For even as its victim is meditating a plan to overcome it, it forestalleth him and bringeth him down. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - இறைமாட்சி (The qualification of the prince) 381. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். He is a lion among princes who is endowed in respect of the six things, namely: troops, population, substance, council, alliances, and fortification. 382. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். Four qualities should never be wanting in the prince, namely: courage, liberality, sagacity, and energy. 383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. Behold the men that are destined to rule the earth: the three virtues, alertness, learning and quickness of decision, leave them not. 384. அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான். The prince shall not fail in virtue and shall abolish unrighteousness: he shall guard his honour jealously but shall not sin against the laws of valour. 385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். The prince shall know how to develop the resources of his kingdom and how to enrich his treasury: how to preserve his wealth and how to spend it worthily. 386. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும். If the prince is accessible to all his subjects and is never harsh of word, his kingdom will be esteemed above every other. 387. இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்துஇவ் வுலகு. இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். Behold the prince who can give with grace and rule with love: his fame will fill the earth, and whatever land he desireth to conquer will be sure to come under his sway. 388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும். நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான். Behold the prince who administereth impartial justice and protecteth his subjects: he will be looked upon as a god among men. 389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும். Behold the prince who hath the virtue to bear with words that are bitter to the ear: his subjects will never leave the shadow of his umbrella. 390. கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி. கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க் கெல்லாம் விளக்குப் போன்றவன். Behold the prince who is liberal and gracious and just, and who tendeth his people with care: he is a light among kings. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - கல்வி (Learning) 391. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்கவேண்டும். Acquire thoroughly the knowledge that is worth acquiring: and after acquiring it walk thou in accordance therewith. 392. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்ண்என்ப வாழும் உயிர்க்கு. எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். Two are the eyes of living kind: the one is called Numbers, and the other, Letters. 393. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்உடையர் கல்லா தவர். கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர். The learned alone can be said to possess eyes: the unlettered have but two sores in their head. 394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். மகிழும்படியாகக் கூடிப் பழகி, ('இனி இவரை எப்போது காண்போம்' என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். It is a festival of joy when learned men come together: but wistful grow their hearts when the time of their parting arriveth. 395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர். Though thou hast to humbly thyself before the teacher even as a beggar before a man of wealth, thou yet acquirest learning: it is those that refuse to learn that are the lowest among men. 396. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அறவிற்கு அறிவு ஊறும். Knowledge is like unto a sandspring: the more thou diggest and drawest thereat, the more excellent is the flow thereof. 397. யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? Everywhere is his home to the learned man, and everywhere his native land: why then doth a man neglect instruction up to his dying day? 398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும். The learning that a man acquireth in this birth will exalt him even unto his seventh reincarnation. 399. தாமஇன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர். The learned man seeth that the learning that delighteth him delighteth also all that listen to him: and he loveth instruction all the more on that account. 400. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. An imperishable and flawless treasure is learning to a man: other wealth is as nothing before it. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - கல்லாமை (The neglecting of instruction) 401. அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். அறிவு நிரம்பவதற்கு காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி அடினாற் போன்றது. Ascending the rostrum without abundant knowlege is like the playing of dice without the chequered board. 402. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதில், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. Behold the man without instruction who desireth to be called eloquent: he is like unto a woman without busts who yearneth to be admired of men. 403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர். Even a fool will be counted wise if he could hold his pace before the learned. 404. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுஉடை யார். கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார். The man without instruction may be as wise as thou pleasest: but the wise will attach no value to his opinions. 405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும். Behold the man who hath neglected instruction, but who is wise in his own eyes: he will be put to shame directly if he openeth his lips in an assembly. 406. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர். கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாதகளர்நிலத்திற்கு ஒப்பாவர். Like unto a waste land that yieldeth no harvests is the man that hath neglected instruction: all that men can say about him is that he liveth, and nothing more. 407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணாமல் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது. Behold the man whose understanding hath not been penetrated by the grand and the subtle: the comeliness of his person is no better than the beauty of an image of clay. 408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு. கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்பமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிக்க துன்பம் செய்வதாகும். Bitter verily is the poverty of the man of learning: but far worse is riches in the hands of the fool. 409. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. The fool though born of a higher family is esteemed much less than a learned man who is of inferior descent. 410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். How much better are men than beasts? Even so much are the learned better than those that have not cared for instruction. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - கேள்வி (Listening to the instruction of the wise) 411. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். The most precious of treasures is the treasure of the ear: verily it is the crown of all kinds of wealth. 412. செவுக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். Even unto the stomach some food will be offered when there is no food for the time being for the ear. 413. செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர். Behold the men who have listened to much instruction: they are the very Gods on earth. 414. கற்றிலின் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும். Let a man listen to instruction even though he hath no learning: for it will be a stay unto him when he is encompassed by difficulty. 415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள்; வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும். The counsel of the righteous is like unto a strong staff: for it keepeth those that listen to it from slipping. 416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். Listen to good words though they be but few: even those few will add to thee a proportionate dignity. 417. பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். Behold the man that hath meditated much in himself and hath laid by a store of instruction by listening to the discourses of the wise: he talketh not nonsense even when in error. 418. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள்கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. Deaf indeed, though it heareth, is the ear that hath not been drilled by words of instruction. 419. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது. Humility of speech is hard to be attained by those who have not listened to the subtle words of the wise. 420. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன? Behold the men that taste with the tongue but know not the taste of the ear: what doth it matter to the world whether they live or die? பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - அறிவு உடைமை (The understanding) 421. அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். அறவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். The understanding is an armour against all surprise: it is a fortress which even enemies cannot storm. 422. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். The disciplined understanding curbeth the senses from roving about, keepeth them from evil, and directeth them towards the Good. 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். To separate the true from the false in every utterance, whoever it be that speaketh, that is the part of a wise understanding. 424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். What he speaketh, the wise man speaketh so as to be understood by all: and from the lips of others he gathereth their subtle meanings. 425. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு. The wise man attacheth all men to himself: and his temper is ever even, neither expanding nore contracting to excess. 426. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். It is part of wisdom to conform to the ways of the world. 427. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். The man of understanding knoweth what is coming: but the fool foreseeth not what is before. 428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். It is folly to rush headlong into danger: it is the part of the wise to fear what ought to be feared. 429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. Behold the man of foresight who is armed for every contingency: he will never know the blow that causeth trembling. 430. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். He that hath understanding hath everything: but the fool though he possesses everything hath nothing. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - குற்றம் கடிதல் (Eschewing of faults) 431. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும். Behold the man who is free from haughtiness and anger and littleness: there is a dignity about him that adorneth his prosperity. 432. இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும். Parsimony, over-confidence, and excessive amour propre are faults in the prince. 433. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துககொள்வர். Behold the men who are jealous of their reputation: though their fault be small even like a millet seed; they look upon it as of the measure of a palmyra palm. 434. குற்றமே காக்க பொருளாக குற்றமே அற்றம் த்ரூஉம் பகை. குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். அகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். Guard thyself jealously against weaknesses: for they are the foes that will lead thee to ruin. 435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும். Behold the man who provideth not beforehand against surprise: he will be destroyed even like a stack of straw before a spark of fire. 436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு? முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராய்வல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்? If the prince correcteth his own faults and then looketh into those of others, where is the ill that can approach him? 437. செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும். செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந்தன்மை இல்லாமல் அழியும். Behold the miser that spendeth not where he ought to spend: his wealth will come to an inglorious wreck. 438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. பொருளினிடத்தில் பற்றுக்கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணித் தகாத ஒரு தனிக் குற்றமாகும். Close-fisted parsimony is not a vice to be classed with other vices: it formeth a class apart. 439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது. Exult not at anything any time: embark not on enterprises that would bring thee no good. 440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப் பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். If thou canst keep from the knowledge of others the things in which thy heart taketh delight, the machinations of thy foes will be in vain. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல் (Cultivating the friendship of the worthy) 441. அறனஅறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல். அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும். Esteem thou the men that have grown old in righteousness, and acquire their friendship. 442. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புிக்கொள்ள வேண்டும். Behold the men who can cure the evils that have already fallen befallen thee and who can guard thee from future ones: cultivate thou their friendship with ardour. 443. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். It will be the rarest of rare good fortunes if thou canst secure to thyself the devotion of men of worth. 444. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். If those that are worthier than thyself have become thy intimates, thou hast acquired a strength before which all other strength paleth. 445. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். As the eyes of the prince are his own ministers, let him use his discretion and choose them wisely. 446. தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல். தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை. Behold the man who can move with the worthy as their intimtae: his foes will be powerless against him. 447. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்? கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் யார் இருக்கின்றனர்? Who can ruin the man that commandeth the friendship of those that can reprove him? 448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும். கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். Behold the prince who reposeth not on the support of men who can rebuke him: he will perish even when he hath no foes. 449. முதல்இலார்ககு ஊதியம் இல்லை மதலையாம் சார்புஇலார்க்கு இல்லை நிலை. முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. Profit is not for those that have no capital: even so stability is not for them that repose not on the firm support of the weis. 450. பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். It is foolish to make a multitude of foes: but it is ten times worse to give up the intimacy of the good. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - சிற்றினஞ்சேராமை (Keeping aloof from vulgar company) 451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். Men of worth fear vulgar company: but little-minded men mix with it as if they made one family with it. 452. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். Water altereth and taketh the character of the soil through which it floweth: even so the mind taketh the colour of the company with which it consorteth. 453. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். The understanding of a man belongeth unto his mind: but his reputation dependeth on the company he keepeth. 454. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉள தாகும் அறிவு. ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளதுபோலக் காட்டி (உண்மையாக நோக்கும்போது), அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். The disposition of a man seemeth to reside in his mind: but its veritable abode is the company in which he moveth. 455. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும். Purity of heart and purity of action depend upon the purity of a man's company. 456. மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை. மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு, அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும்; இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. The pure of heart will have a righteous progeny: and everything prospereth unto those that consort with good company. 457. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். Purity of heart is a treasure unto a man: and virtuous company bringeth him every glory. 458. மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும். Though themselves are endowed with every virtue, the wise look upon the company of the worthy as a tower of strength. 459. மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். Virtue leadeth unto heaven: and the company of the good steadieth a man in the practice thereof. 460. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. There is no greater ally to a man than good company: and nothing bringeth greater troubles than evil company. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - தெரிந்துசெயல்வகை (Deliberation before action) 461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும். Take into consideration the output and the wastage and the profit that an undertaking will yield: and then put they hand to it. 462. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை. Behold the prince who undertaketh an enterprise only after consulting with men chosen for their worth: there is nothing that is impossible for him. 463. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார். There are enterprises that tempt with a great profit but which perish even the capital itself: the wise undertake them not. 464. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார். Behold the men who fear to be ridiculed by others: they do not take up any enterprise without previous deliberation. 465. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு. செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியல் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். To make war without planning every detail of it beforehand is only to transplant they enemy on carefully prepared soil. 466. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். There are things that ought not to be done and if thou do them thou wilt be ruined: and there are things that ought to be done and if thou do them not thou wilt be ruined also. 467. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். Decide not upon any acting except after careful deliberation: he is a fool who undertaketh first and sayeth it in his heart, I shall think afterwards. 468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்தபோதிலும் குறையாகி விடும். Behold the man that goeth not to his work the right way about: all his labour will be a waste even if numbers come to his aid. 469. நன்றுஆற்ற லுள்ளும் தவுறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை. அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். Even in doing good thou mayest err, if thou suit not the benefit to the character of him that receiveth. 470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது; ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்யவேண்டும். Let the thing that thou decidest on be above reproach: for the world despiseth the man who stoopeth to a thing that is beneath himself. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - வலி அறிதல் (Judging of strength) 471. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். Weight justly the difficulty of the enterprise, thy own strength and the strength of thine enemy, and the strength also of your allies: and then enter thou upon it. 472. ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. Behold the prince who knoweth his own force and hath learned what he aught to leanr, and who oversteppeth not the limits of his force and information: his invasions will never fail. 473. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர். Many there have been who in the sanguineness of their hearts over-estimated their strength and adventured, but were cut off in the middle. 474. அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். Behold the men who know not to live in peace, who know not their own measure, and who are full of self conceit: they will have a swift end. 475. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். மயிலிற்கு ஏற்றிய வண்டியே அனாலுிம், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். Put too many of them and even peacock's feathers would break the waggon's axle. 476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி யாகி விடும். ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். Those that have climbed to the top of the tree will lose their lives if they attempt to climb still higher. 477. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும். Keep thou in mind the extent of thy wealth and let thy gifst be commensurate therewith: that is the way to conserve and divide thy substance. 478. ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை போகுஆறு அகலாக் கடை. பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. It mattereth not if the feeder channel is strait, provided that the draining channel is not wider. 479. அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும். Behold the man that taketh not account of his measure nor liveth within the bounds thereof: he may look like prospering, but he will perish leaving no trace behind. 480. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும். தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். Behold the man that taketh not measure of his wealth and lavisheth it on every side with an unsparing hand: his substance will quickly come to nought. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - காலம்அறிதல் (Judging the opportune moment) 481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகைய வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும். The crow triumpheth over the owl when it is day: even so opportunity is a great thing to th eprince who would vanquish his enemy. 482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல், (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும். To follow closely on the pace of Time: that is the cord that will bind the Goddess of Fortune to thee firmly. 483. அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்? (செய்யும் செயவை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ? Where is the thing called impossible if thou start on the enterprise with a knowledge of the right season and employ the proper means? 484. ஞாலம் கருதினும் கைகூடுங் காலம் கருதி இடத்தால் செயின். (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். Thou canst conquer even the whole world if thou choose the proper time and the proper objectives. 485. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர். Those that are intent on conquests will be quietly watching their opportunity: they will know neither confusion nor hurry. 486. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது. The ram steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy. 487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்; (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர். The wise show not their anger on the spot: they will nurse it within their hearts and wait for their opportunity. 488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும். Bend down before thy adversaries when they are more powerful than thyself: they can be easily overthrown when thou attackest them at the moment that their power is on the decline. 489. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும். When thou hast got an unusual chance, hesitate not but straightaway attempt even the impossible. 490. கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும். When the time is against thee feign inaction like the stork: but when the tide is on, strike with the switfness of its souse. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - இடன்அறிதல் (Judging of place) 491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது. முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது. Provoke no war and begin no operation except after making a thorough reconnaissance of the theatre of operations. 492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும். It is an immense advantage even to the powerful and the strong to be based on fortified places. 493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர். Even the weak can hold their own and triump over a powerful foe if they choose the proper theatre and operate cautiously. 494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து துன்னியார் துன்னிச் செயின். தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். The plans of thy adversaries will be baffled if thou fall back on strong positions already reconnoitred and base thyself on them. 495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். All-powerful is the crocodile in deep water: but out of it, it is the plaything of its foes. 496. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பால்களும் நிலத்தில் ஓட முடியாது. The strong-wheeled chariot runneth not on the sea; for saileth not the ocean going ship, on dry land. 497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். (செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. Behold the prince that hath planned everything beforehand and striketh at the proper objective: he wanteth no other ally than his own courage. 498. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். If the prince whose army is weak only betaketh himself to a proper theatre of war, all the endeavours even of the strongest foes would be vain against him. 499. சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. Even if they have no proper defences and other advantages it is hard to beat people on their own soil. 500. கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா வேலாள் முகத்த களிறு. வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். Behold the high-mettled elephant that hath faced without wincing a whole multitude of lancers: even a jackal will triumph over him if he is entangled in marshy ground. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - தெரிந்து தெளிதல் (Testing of men for confidence) 501. அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும். அறம் பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்டபிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். Love of the right, gold, pleasure and fear of life, these four are the tests of man: give thy confidence therefore to men that satisfy all these tests. 502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாண்உடையான் கட்டே தெளிவு. நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களொச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். Behold the man who is born of a good family, who is free from faults and who dreadeth disgrace: he is the man for thee. 503. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். Even men of rare learning and of pure hearts will not be found, when thou dost test them, to be absolutely exempt from all ignorance. 504. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். Weigh a man's good and weigh his evil: whichever is more, take that to be his nature. 505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் கருமமே கட்டளைக் கல். (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். Dost thou want to find out whether a man is noble or little-minded? Know that conduct is the touchstone of character. 506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர் பற்றிலர் நாணார் பழி. சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார். Beware of trusting men that have no kindred: for their hearts will be without attachment and they will be callous to shame. 507. காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும். If thou choosest a fool for thy confidential adviser because that thou lovest him, he will lead thee to endless follies. 508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். மற்றவனைப்பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும். Behold the man that trusteth another without trying him: he createth endless evils even unto his posterity. 509. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும். Never trust men without trying them: and after trying them, give each one of them the work for which he is fit. 510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். To trust a man whom thou bast not tried and to suspect a man whom thou hast found worthy lead alike to endless ills. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - தெரிந்து வினையாடல் (Testing and employment of men) 511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். Behold the man that seeth the good and seeth the evil also, and chooseth only that which is good: employ thou him in they service. 512. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும். Behold the man that is able to develop the resources of thy kingdom and to cure the ills that may befall it: set him to manage thy affairs. 513. அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம். Let him alone be selected for service who is well endowed with kindness and intelligence and decision, and who is free from greed. 514. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர். எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு. Many are the men that satisfy every test and yet alter in the actual performance of duty. 515. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது. Work should be entrusted to men in consideration of their expert knowledge and capacity for patient exertion, and not of their love towards thy person. 516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்து மாறு உணர்ந்து செய்விக்கவேண்டும். Choose the servant and give him the work for which he is fit: see that the time is ripe for performance and then get him to begin it. 517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல். இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். Determine first the capacity of the servant and the work for which he is fit: and then leave him in responsible charge of the same. 518. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல். ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும். After thou hast decided that a man is fit for an office, raise him to the dignity and give him the conveniences that will enable him to fill that office worthily. 519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறு ஆக நினைப்பானை நீங்கும் திரு. மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும். Behold the man who misunderstandeth the liberties taken by the servant who is skilful at his work: Fortune will depart from him. 520. நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும். Let the prince oversee everything every day: for there will be nothing wrong with the country so long as there is nothing wrong with the officers of the State. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - சுற்றம் தழால் (Cherishing of kindred) 521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. Constancy of attachment even in adversity belongeth only unto kindred. 522. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். If a man is blessed with kindred whose love for him abateth not, his fortunes will never cease to grow. 523. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நிறைந்தாற் போன்றது. Behold the man who does not mix freely with his kinsmen and command their affection: he is like a tank without bunds: the waters of prosperity will flow away from him. 524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும். To gather and attach one's kindred to onself: that is the use and purpose of prosperity. 525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழ்ப்படுவான். If a man have a sweet tongue and a liberal hand his kinsmen will gather round him in serried ranks. 526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. Behold the man that giveth freely without stinting and is never angry: the world hath none who hath a more attached kindred than he. 527. காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. The crow concealeth not its food selfishly from its fellows but shareth it lovingly with them: prosperity will abide only with men of a like nature. 528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். It is good if the prince treateth not all his kinsmen alike, but treateth each differently according to his merit: for there are many that love to have privileges not shared by others. 529. தமராகிக் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். The estrangement of a kinsman is easily remedied: remove the cause of the coolness and he will come back to thee. 530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். தன்னிடமிருந்த பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும். When a kinsman that hath broken with thee cometh back to thee for a reason, accept thou him, but with caution. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - பொச்சாவாமை (Guarding against insouciance) 531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும். Worse than excessive rage is the unguardedness that cometh of over-weening self-complacency. 532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும். A false sense of security killeth glory even as indigence crusheth the understanding. 533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. மறதியால் சோர்ந்து நடப்பவர்க்கும் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும். Glory is not for the unwatchful: that is the conclusion of every school of thinkers in the world. 534. அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்குல்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. Of what avail are fortresses to the cowardly? or abundance of resources to the incautious? 535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்ஊறு இரங்கி விடும். வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். He who faileth to guard against everything beforehand will deplore his negligence when he is surprised by disaster. 536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்று இல்லை. If thou relax not in thy vigilance at all times and against all men, there is nothing like it. 537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. Nothing is impossible to the man who can bring unto his work a mind that is ever wakeful and cautious. 538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை. The prince should devoteth himself assiduously to works that are commended by the wise: if he neglect them he will not escape suffering in any of his seven reincarnations. 539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக்கொண்டு கடமையை மறந்திருக்கும்போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும். When thou art tempted to be self-complacent and elated, call to thy mind those that have perished by their supinenesss and negligence. 540. உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப்பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். Verily it is easy for a man to achieve all that he desireth, provided he keepeth his purpose constantly before his mind. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - செங்கோன்மை (Just Government) 541. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவுநிலைமை பொருந்தி, (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். Deliberate will and lean not to either side: be impartial and consult with the men of law: that is the way to administer justice. 542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி. உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன; அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். The world looketh up to the rain-cloud for life: even so do men look up to the sceptre of the prince for protection. 543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தை காப்பது அரசனுடைய செங்கோலாகும். The sceptre of the prince is the mainstay of the science of the Brahmans and of righteousness also. 544. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. குடிகளை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும். Behold the noble prince who ruleth the people of his dominions with loving care: sovereignity will never depart from him. 545. இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தல் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். Behold the prince who wieldeth the sceptre in accordance with the law: seasonal rains and rich harvests have their home in his land. 546. வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாது எனின். ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். It is not the lance that bringeth victory unto the prince: it is rather his sceptre, and that provided it is straight and leaneth not to either side. 547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதி முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். The prince is the protector of all his people: and him his sceptre will guard, provided he alloweth it not ever to lean to either side. 548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும்) தானே கெடுவான். Behold the prince who is not easy of access and who judgeth not causes with care: he will fall from his place and perish even when he hath no enemy. 549. குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில். குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்பளைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று. Behold the prince that guardeth his subjects from enemies both within and without: if he punish them when they go wrong it is not a blemish: it is his duty. 550. கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும். Punishing the wicked with death is like the removing of weeds from the cornfield. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - கொடுங்கோன்மை (Tyranny) 551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து. குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன். Behold the prince who oppresseth his subjects and doth inequity: he is worse than an assassin. 552. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது. A request from him who holdeth the sceptre is like the stand and deliver of the highway robber. 553. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். நாள்தோறும் தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். Behold the prince who doth not over-see his administration everyday and remove the irregularities therein: his sovereignity will wear away day by day. 554. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்துவிடுவான். Behold the thoughtless prince whose rule swerveth from the ways of justice: he will lose his kingdom and his substance also. 555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரஅன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ? Verily it is the tears of those groaning under oppression that wear away the prosperity of the prince. 556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. அரசர்க்குப் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும்; அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும். It is just rule that bringeth renown unto princes: but an unjust government darkeneth their glory. 557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மை யானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி. How fareth the earth under a rainless sky? even so fare the people under the rule of a cruel prince. 558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின். முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். The condition of the rich man is more galling than that of the poor under the rule of the tyrant prince. 559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழைபெய்யாமல் போகும். The heavens will not send showers in their season if the prince swerveth from justice and right. 560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர். The udders of the cow will be dried up and the Brahman will forget his science if the prince ruleth not with justice. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - வெருவந்த செய்யாமை (Abstaining from deeds that cause trepidation) 561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். The prince shall measure the guilt of the offender and punish him so that he offend not again: but the punishment shall not be excessive. 562. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர். ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். Those that desire that their power should last, let them brandish the rod smartly but lay it on soft. 563. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். Behold the prince who ruleth with a rod of iron and causeth terror to his people: he will stand without a friend and perish forthwith. 564. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 'நம் அரசன் கடுமையானவன்' என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். Behold the prince whose cruelty is a byword among his people: he will lose his kingdom betimes and his days will be shortened also. 565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. Behold the dour-faced prince who is inaccessible to his people: the wealth in his hands is like treasure guarded by a demon. 566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும். கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். If the prince is harsh of word and unforgiving, his prosperity, be it ever so great, will come to an end quickly. 567. கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். Words that are harsh and punishments that are excessive are the files that file away the iron of power. 568. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும். Behold the prince who will not take counsel with his ministers bu twho falleth into a passion when his projects fail: his prosperity will wane away. 569. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். Behold the prince who looketh not to his defences while yet there is time: when he is surprised by a war he will be seized with trembling and perish quickly. 570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை. Tyranny that allieth itself to fools and charlatans is the only burden under which the earth groaneth: there is none other besides. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - கண்ணோட்டம் (Considerateness) 571. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு. கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. Behold that ravishing Beauty called Considerateness: If the world runneth on smoothly it is all owing to her. 572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை. In considerateness have the amenities of life their existence: those who possess it not are a burden unto the earth. 573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்? What is the worth of the song that cannot be sung? and what is the worth of the eye that showeth not indulgence? 574. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்? தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் உணரப்படும். What is the use of eyes that merely show in the face, if they show not consideration for others according to their measure? 575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். Consdierateness is the ornament of the eye: the eye that hath is not will be looked upon as a mere sore. 576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர். கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர். Behold the men who have eyes, but which show not consideration towards others: verily they are no better than trees fixed in the earth. 577. கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர்; கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை. Verily they are blind, those who show not consideration towards: and there are none that truly see but are indulgent to others' faults. 578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ் வுலகு. தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது. Behold the man who can be considerate towards others without derogating from any of his duties: he will inherit the earth. 579. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை. தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பெறுத்தக் காக்கும் பண்பே சிறந்தது. It is nobility for forbear and show indulgence even unto those that have offended thee. 580. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். Those who desire to be styled the very pink of courtesy will drink off even the poison that hath been mixed for them before their own eyes. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - ஒற்றாடல் (The service of intelligence) 581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேண்டும். Let the prince understand that Political Science and his Intelligence Corps are the eyes wherewith he seeth. 582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். It is the duty of the prince to learn betimes everything that befalleth every man and every day. 583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல். ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை. Behold the prince that learneth not the happenings about him by means of scouts and spies: conquests are not for him. 584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். The prince shall set spies to watch closely the officers of the realm, his own kindred, and his enemies. 585. கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. ஐயுற் முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன். Behold the man who can wear an unsuspicious appearance, who will not know confusion before any man, and who can guard his secrets from ever leaking out: he is the proper man for the work of Intelligence. 586. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து என்செயினும் சோர்வுஇலது ஒற்று. துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவர். Spies and scouts should disguise themselves as ascetics and holy men, and their investigation should be thorough: and whatever is done them, they should not let out their secrets. 587. மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான். Behold the man who can draw out secrets from others and whose information is every unconfused and clear: he is the man for the work of Intelligence. 588. ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ளவேண்டும். Even the information that hath been obtained by a spy should be tested by that of another. 589. ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும். See that no spy knoweth the others engaged in the same work: when three reports agree, thou mayest give credence to them. 590. சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைபொருளைத் தானே வெயிப்படுத்தியவன் ஆவான். Reward not openly the officers of Intelligence; for if thou do, thou merely lettest out thy own secret. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - ஊக்கம் உடைமை (Energy) 591. உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார் உடையது உடையரோ மற்று? ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ? Those that possess energy are alone to be called high: as to those that possess it not, do they really possess what they own? 592. உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடையமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும். Energy alone can be called a man's wealth: for riches endure not for ever and will depart from him one day. 593. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துஉடை யார். ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார். Behold the men that hold in their hands the resource called unremitting energy: they will never despair, saying Alas, we are ruined. 594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா னுழை. சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். Behold the man who remitteth not ever from exertion: Good Fortune inquireth the way to his home and entereth there. 595. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. The water with which a plant is watered is the measure of the luxuriance of its flower: even so, the spirit of a man is the measure of his fortunes. 596. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்; அவ் வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. Let all thy purposes be grand: for then, if they fail, thy glory will tarnish never. 597. சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார். Men of spirit lose not their heart when they meet with defeat: the elephant planteth his legs only more firmly when he is hit by the deep piercing arrow. 598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. ஊக்கம் இல்லாதவர், 'இவ்வுலகில் யாம் வண்மை உடையேம்' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார். Behold the men that are wanting in energy: the glory of an exhaustless liberality can never be theirs. 599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். What availeth his size and his sharp tapering tusks? The heart of the elephant sinketh when he seeth the tiger preparing to spring. 600. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு. ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. Exuberance of spirit, that alone is strength: those that have it not are mere stocks: their human bodies alone make the difference. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - மடி இன்மை (Abstention from sloth) 601. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும். ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும். The perennial light called Dynasty will be extinguished if it is invaded by the foul vapour of sloth. 602. மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். தம் குடியைச் சிறப்புடைய குடியாத விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும். Let them call sloth by its real name and avoid it, those who desire to establish their family on a solid foundation. 603. மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்குமுன் அழிந்துவிடும். Behold the fool who huggeth assassin sloth unto his heart: his dynasty will fall even before his day is ended. 604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும். Behold the men who are sunk in sloth and who turn not their hand to high and noble undertakings: their house will go to ruin and their vices will grow apace. 605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். Procrastination, forgetfulness, sloth, and sleep, these four are the cosy pleasure boats of those that are fated to perish. 606. படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. The slothful can never thrive in the world even though they have the favor of princes. 607. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர். Behold the men who are slothful and who turn not their hand to great undertakings: they will have to listen to much reproof and contumely. 608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும். If sloth find a home in a family, the family will soon be in bondage to its foes. 609. குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும். ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும். The afflictions that may have befallen a man's family will cease to exist the moment he giveth up sloth. 610. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான். Behold the prince that knoweth not sloth: he will bring within his sway all that hath been measured by the steps of Trivikrama. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - ஆள்வினை உடைமை (Manly exertion) 611. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும். Shrink not from any work saying, It is impossible: for labour will give the strength to achieve everything. 612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. தொாழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டாவரை உலகம் கைவிடும்; ஆகையால், தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும். Beware of leaving any work unfinished: for the world careth not for those that do not complete the work that they have once begun. 613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது. The proud pleasure of being able to serve all men belongeth only to the greatness that shrinketh not from any exertion. 614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளஆண்மை போலக் கெடும். முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும். Like unto a sword in the hands of a eunuch is the liberality of the indolent man: it will not endure. 615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தஊன்றும் தூண். தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். The man who loveth not pleasure but loveth work is a pillar of strength unto his friends and will wipe away their tears of grief. 616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும். Industry is the mother of Prosperity: but Indolence only bringeth forth Penury and Destitution. 617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளான் தாமரையி னாள். ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். In sloth hath the Genius of Wretchedness her home: but the Lotus-born One resideth in the labour of him who yieldeth not to sloth. 618. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறியவேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. It is no shame if fortune faileth a man: but it is a disgrace if he abstain deliberately from exertion. 619. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். Even though the Gods be against, Industry is bound to pay the wages of labour. 620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர். They will snap their fingers even at Destiny who succumb not to it but labour unremittingly in spite of it. பொருட்பால் ----------- I அரசியல் அதிகாரம் - இடுக்கண் அழியாமை (Intrepidity in the face of misfortune) 621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். துின்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப் போன்றது வேறு இல்லை. When thou meetest with Misfortune face it with thy best smile: for there is nothing like a smile to enable a man to hold him on against it. 622. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயலப்பை நினைத்த அளவில் கெடும். A whole sea of troubles will abase themselves the moment a shifty mind collecteth itself to face them. 623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். Troubles they send away troubled who trouble not themselves at the sight of troubles. 624. மடுத்தவாய எல்லாம் பகடுஅன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும். Behold the man who is prepared to strain his every never like the bull-buffalo to wade through every difficulty: he may meet with obstacles but he will send them away disappointed. 625. அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். Behold the man whose heart sinketh not even at a whole host of troubles arrayed against him: the obstacles in his path have themselves met with an obstacle. 626. அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்? செல்வம் வந்தபோது 'இதைப் பெற்றோமே' என்று பற்றுக்கொண்டு காத்திறியாதவர், வறுமை வந்தபோது 'இழந்தோமே' என்று அல்லல்படுவரோ? The men that exult not at good fortune, can they ever have to fret themselves saying, Alas! we are ruined? 627. இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார். The wise know that the body is a target unto misfortune: and so they worry themselves not when they meet with a calamity. 628. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் துன்பம் உறுதல் இலன். இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை. Behold the man who loveth not pleasure and who knoweth that difficulties are a part of the law of things: he smarteth not ever under any check. 629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை. The man who runneth not after pleasure in the day of success suffereth not pain in the day of failure. 630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். Behold the man who looketh upon the stress and strain of exertion as a veritable joy: he will be extolled by his very enemies. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - அமைச்சு (The councillor of State) 631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். Behold the man who can judge aright the ways and means of achieving great enterprises and the proper season to commence them: he is the proper man for thy Council. 632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. அஞ்சாமையும், குடிப்பிறப்பும், காக்கும் திறனும், சுற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன். Study, resolution, manly exertion, and loving attention to the welfare of the people, these make, along with the last, the five qualifications of the councillor. 633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன். He is the able minister who possesseth the capacity to disunite allies, to cherish and keep up existing friendships, and to reunite those who have become enemies. 634. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன். Judgement in the choice of projects and the means of their execution, and positiveness in the expression of opinion are necessary qualities in the councillor. 635. அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராயந்து கூறும் துணையாவான். Behold the man who knoweth the law and aboundeth in instruction, is deliberate in his speech and always understandeth what is fit for each occasion: he is the councillor for thee. 636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை. இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்கிகளாய் முன்நிற்பவை எவை உள்ளன? What is there that is too subtle for men who add knowledge of books unto natural intelligence? 637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும். Even though thou art wise in thy knowledge of books, gater thou the wisdom of experience and act in accordance therewith. 638. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும். The prince may be a fool and may thwart him at every step: but the duty of the councillor is always to point to him what is just and proper. 639. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும். தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும். Behold the minister that sitteth in the Council and plotteth the ruin of his prince: he is more dangerous than seven hundren million enemies. 640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர். The irresolute may even plan perfectly: but they will waver in the course of the execution and will never accomplish their designs. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - சொல்வன்மை (Eloquence) 641. நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால், மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று. The blessing of the tongue is a blessing indeed: for it is a blessing apart and formeth not part of other blessings. 642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. ஆக்கமும் கேடும் சொல்கின்ற செல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும். Prosperity and ruin are in the power of the tongue: guard thou therefore against imprudence of speech. 643. கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும். Behold the speech that bindeth friends more closely and softeneth the hearts of even enemies: that alone is worthy of the name. 644. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊஉங்கு இல். சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை. Weigh each circumstance aright and then speak the speech that is fit: for the increase of righteousness and profit there is no other thing of more worth to thee than it. 645. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக் கருதியதைச் சொல்லவேண்டுிம். Speak thou the speech that cannot be silenced by any other speech. 646. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள். பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். To speak so as to bind to one's self one's hearers and to take the substance in the words of others, that is the part of the consummate statesman. 647. சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெவ்வது யார்க்கும் முடியாது. Behold the man who is eloquent of speech and knoweth neither confusion nor fear: it is impossible for any one to beat him in debate. 648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும். Behold the men whose speech is well ordered and couched in persuasive language: the world will be at their beck and call. 649. பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற சிலசொல்லல் தேற்றா தவர். குற்றம்ற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர். Verily they have a passion for much speaking who know not to say their mind in few and well-chosen words. 650. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார். தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தபோதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். Behold the men who cannot expound unto others the knowledge that they have acquired: they are like unto the flower that hath blossomed on its bunch but giveth forth no fragrance. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - வினைத்தூய்மை (Purity of Action) 651. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும். Alliances bring success unto a man: but purity of action fulfilleth his every desire. 652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. புிகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். Always turn thy face away from these deeds that bring not forth lasting good as well as glory. 653. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும். Those that desire to rise in the world, let them abjure all action that can tarnish their glory. 654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார். Behold the men who see things in their right proportions: even when fallen on evil days stop not to action that is dishonourable and mean. 655. எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்அஎன்ன செய்யாமை நன்று. பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. Let not a man do those things which make him cry afterwards, what is it that I have done? and if he hath done any such thing, it will be good for him if he doth it not once again. 656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற் க சான்றோர் பழிக்கும் வினை. பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான் இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது. Let not a man do those things that good men condemn, even to save the mother that bore him from starvation. 657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது. The indigence of the worthy is far better than wealth that is amassed by dishonourable means. 658. கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். Behold the men that shun not those things that are forbidden by good morals: they will come to grief even if they succeed in their designs. 659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும். All that is wrung in the midst of tears will depart also accompanied by weepings: but that which is acquired by righteous ways, even if lost in the middle increaseth in the latter end. 660. சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது. To try to lay by wealth by means of guile is like trying to preserve water in a pot of clay that is not baked. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - வினைத்திட்பம் (Decision of Character) 661. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை. Greatness of achievement is nought else but the greatness of the will that striveth therefore: all other things come not near the mark. 662. ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம். To avoid all action that is bound to fail and not to turn away from one's purpose because of obstacles: these two are said to be the guiding principles of the wise. 663. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். The man of action letteth his purpose appear only when that purpose is achieved: for an untimely disclosure may create obstacles that cannot be surmounted. 664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியஆம் சொல்லிய வண்ணம் செயல். 'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். To say a thing is easy for any man: but to do it in the manner undertaken is a rare thing indeed. 665. வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது. நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கபபட்டு விளங்கும். Behold the man who hath acquired a name for the doing of great deeds: his services will be greatly in request with the prince and the will be esteemed by all. 666. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். That which they will, men acquire even in the manner that they will, provided they will with all their might. 667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சுஆணி அன்னார் உடைத்து. உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்; அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது. Despise not a man for his look: for there are men who are even as the axle-pin of the might rolling car. 668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். When thou hast resolved upon a thing with all thy wits about thee, waver not but pursue thy purpose with vigour. 669. துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும். Take up the doing of works that increase happinges: and even if thou have to suffer cruel mortification in the doing of them, steel they heart and persevere to the end. 670. எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. Behold the men that lack decision of character: whatever greatness they may have achieved in other directions the world will not care for them. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - வினைசெயல்வகை (The Conduct of Affairs) 671. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்; அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும். The end of all deliberation is to arrive at a decision: and when a decision is come to, it is wrong to delay the execution thereof. 672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது. Do with deliberation those things that ought to be done in a leisurely way: but not off even for a moment those things that require prompt action. 673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும். Go straight for the goal whenever circumstances permit: but when circumstances are against, follow along the path that offereth the least resistance. 674. வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால் தீஎச்சம் போலத் தெறும். செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். Unfinished work and enemies that are left unsubdued are like unextinguished sparks of fire: they will grow betimes and overwhelm the perfunctory man. 675. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும். Five things should be carefully considered in the doing of all action, namely, the resouces in hand, the instrument, the nature of the action itself, the proper time, and the proper place for its execution. 676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டுிம். Determine first the exertion necessary, the obstacles in the way, and the expected profit: and then take up the enterprise. 677. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகும். The way to succeed in any undertaking is to learn the secret thereof by entering into the heart of the man who is an expert in it. 678. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது. Men decoy one elephant by means of another: even so make one enterprise the means of achieving a second. 679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும். Placate and make friends with thy enemies even more swiftly than thou rewardest friends. 680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர். The weak should endeavour to keep their life free from constant alarms: so, when an opportunity offereth itself they should submit to an alliance with the strong. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - தூது (The Ambassador) 681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு. அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் ஆகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள். A loving nature, high birth, and manners that captivate princes, these are the qualifications of the ambassador. 682. அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். Loyalty to his prince, a quick understanding, and skill in speech, these three are indispensable to the envoy. 683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். Behold the man who undertaketh to speak before princes words that shall profit his master: he shall be a scholar among scholars. 684. அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம். Let that man go on embassies who possesseth common sense and learning and a commanding presence. 685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன். Conciseness of speech, sweetness of tongue, and a careful eschewing of all disagreeable language, these are the means by which the ambassador shall work his master's profit. 686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன். Learning, sang-froid, persuasive speech, and a just instinct for what is meet for each occasion, all these are necessary qualifications in the envoy. 687. கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை. தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொால்கின்றவனே தூதன். He is the fittest ambassador who hath a just eye for time and place, who knoweth his duty, and who weigheth his words before uttering them. 688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும். The man that is sent on embassies shall be firm of mind, pure of heart, and engaging in his ways. 689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன். குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன். Behold the firm-minded man that will never let fall from his lips words that are weak and unbecoming: he is the fit man to deliver the messages of princes at foreign courts. 690. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு உறுதி பயப்பதாம் தூது. தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன். Even when threatened with death the perfect ambassador will not fail in his duty but will endeavour to secure his master's profit. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - மன்னரைச் சேர்ந்தொழுதல் (Comporting oneself before princes) 691. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும். Whoever desireth to move with princes, let him be like unto men that warm themselves at a fire: let him not approach too near nor stand too far away. 692. மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். Not to itch for those things that the prince desireth: that is the secret of acquiring his lasting favour and thereby growing in affluence. 693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்; ஐயற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. If thou desire not to fall into disgrace steer clear of all graver failings: for once suspicion is roused, it is impossible for any one to remove it. 694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியா ரகத்து. வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன்சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும். Speak not in whispers in the presence of the great ones: nor smile to another's face when they are near. 695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. (அரசர் மறைபொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். Do not try to overhear any conversation nor to fish out that which is withheld from thee: and then only receive the secret when it is imparted to thee. 696. குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேெண்டும். Take into thy consideration the humour of the prince and the season that is, and then speak attractively the words that will please him. 697. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொால்லாமல் விட வேண்டும். Speak those things before the prince that are pleasant to him: but things that are unprofitable, speak not ever even if he demandeth. 698. இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். (அரசரை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்கவேண்டும். Trifle not with the prince because he is young or because he is thy kinsman or connexion: but walk with awe before the glory that is him. 699. கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்குற்ற காட்சி யவர். அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், 'யாம் அரசரால் விரும்பப்பட்டோம்' என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். Behold the men whose vision is unconfused and clear: they never do questionable things because they are favoured of the prince. 700. பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 'யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம்' எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும். The men that rely on their intimacy with the prince and do unworthy deeds will perish. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - குறிப்பு அறிதல் (Judgying by looks) 701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான். Behold the man who divineth what is in the mind before the voice uttereth it: he is an ornament unto all the world. 702. ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும். Look upon that man as a God who divineth with certitude that which is in the heart. 703. குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். Behold the men that can judge a man's intentions from his looks: take them into thy council at whatever cost. 704. குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்புஓர் அனையரால் வேறு. ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர். The men that understand without words may have the same features with the men that do not so understand: but they form a class apart. 705. குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்? What is the speciality of the eye among the organs of sense, if it divineth not by a look that which is in the heart? 706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும். Even as the crystal changeth and assumeth the colour of that which is near, even so doth the face alter and show that which overfloweth the heart. 707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ? What is there that is subtler than the face? for whether the heart is angry or glad it is the face that expresseth it first. 708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவருடைய முகத்தை நோக்கி நின்றால் போதும். If thou canst find a man that is able to read the inside of thy heart without words, it is enough that thou merely lookest towards him and thy wishes will be fulfilled. 709. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும். If only there are men by who understand its moods and tricks, the eye alone will declare to them whether there is hatred in the heart or friendship. 710. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்அல்லது இல்லை பிற. "யாம் நுட்பமான அறிவுடையேம்" என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை. The measuring rod of those that call themselves subtle is, when thou search for it, nought else but their eye. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - அவை அறிதல் (Judging of the audience) 711. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும். O ye that have studied eloquence and have acquired good taste! study well your audience and suit your speech to it. 712. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும். O ye that have the gift of eloquence! ascertain the mood of your audience first and then speak after careful deliberation. 713. அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை. Behold the men that take upon themselves to address an assembly without studying its nature: they know not the art of speaking nor are they good for anything else. 714. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண்கண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். Discuss wisdom in the congregation of the wise: but put on the white robe of simplicity when thou hast to deal with fools. 715. நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது. Behold the self-control that denieth itself the lead in an assembly of ancients: it is a virtue that outshineth other virtues. 716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். Behold the man who betrayeth himself into uttering indiscreet words before men of wisdom: he will feel even as one who has fallen from the way of Righteousness. 717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. குற்றமறச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும். The learning of the scholar shineth forth in all its brilliance only in an assembly of accomplished critics. 718. உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது. Delivering an address of good counsel to men of understanding is like watering the roots of living plants. 719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது. O ye that desire to be listened to with approval by the worthy! beware of addressing even by mistake an audience of fools. 720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள்பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது. A discourse spoken before men that are hostile to thee is like unto ambrosia spilled on filthy ground. பொருட்பால் ----------- II அமைச்சியல் அதிகாரம் - அவையஞ்சாமை (Self-confidence before an audience) 721. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார். Behold the men who have studied eloquence and have acquired good taste: they will know how to order their discourse and will not fail before a wise audience. 722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவர். Behold the man who can sustain his conclusions in the congregation of the learned: he will be called a scholar among scohlars. 723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே. They are common, those that can brave death on the battle-field: but they are rare who can face an audience without trembling. 724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும். Speak with assurance before the learned that which thou hast mastered: and that which thou knowest not, learn from them that excel therein. 725. ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். Master thou the science of reasoning that thou mayest speak without fear in any assembly. 726. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு? அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு? What have they to do with swords, those who have no mettle in them? and what have they to do with books, those who are afraid to face the assembly of the wise? 727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது. Even as a sword in the hand of the eunuch on the battle-field is the learning of him who is afraid to face an audience. 728. பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே. Behold the men who cannot drive home their point before a learned assembly: even if they possess varied learning they are good for nothing. 729. கல்லா தவரின் கடையென்ப கற்றுஅறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார். நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சிகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர். Behold the men that possess learning but fear to face an assembly of worthy men: they will be esteemed lower than even the ignorant. 730. உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். Behold the men that are afraid before an assembly and are unable to expound what they have studied: though they breathe, they are no better than dead men. பொருட்பால் ----------- III அரணியல் அதிகாரம் - நாடு (Territory) 731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். That is the great country which never faileth in its yield of harvests, and which is the abode of sages and of rich men that are worthy. 732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும். That is the great country which maketh men love it by the greatness of its wealth and which yieldeth abundantly for that it is free from pests. 733. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும். Behold the great nation: even if burdens upon burdens press down upon it, it will support them bravely and pay its taxes in full withal. 734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்து வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். That is the great country which is free from famines and plagues, and which is safe from the invasion of foes. 735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. பலவகையாக மாறுபடும் கூட்டஙகளும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு. That is the great nation which is not divided into warning sects, which is free from murderous anarchists, and which hath no traitors within its bosom to ruin it. 736. கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை. பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர். Behold the land that hath known no devstation by foes, and which even should it suffer any, would not bate one whit in its yield: it will be called a jewel among the countries of the world. 737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம். The waters of the surface, the waters that flow underground, seasonal rains, well-situated mountains, and strong fortifications, these are indispensable to every country. 738. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். Wealth, richness of yield, happiness of the people, immunity from diseases, and safety from invasions, these five are the ornaments of a kingdom. 739. நாடென்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளந்தரு நாடு. முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல. That alone deserveth to be called a country which produceth abundantly without the labour of the people: that which yieldeth only unto labour deserveth not that name. 740. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்துஅமை வில்லாத நாடு. நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும். Even if a country hath all these blessings it is worth nothing if it is not blessed in its ruler. பொருட்பால் ----------- III அரணியல் அதிகாரம் - அரண் (Fortresses) 741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். (படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். Fortresses are helpful to the weak who are thinking only of their defence: but they are also no less helpful to the strong and powerful. 742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண். மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும். Water-courses, deserts, mountains, and thick jungles all these constitute various kinds of defensive barriers. 743. உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். Height, thickness, solidity, and impregnability, these are the four requisites that Science demandeth of fortress. 744. சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும். That is the best fortress which is vulnerable in very few places but at the same time is spacious, and which is capable of withstanding the assaults of those that attempt to storm it. 745. கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண். பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாகிய தன்மை உடையது அரண். Impregnability, facility of defence for the garrison, and abundance of provisions inside, these are the essential requisites of the fortress. 746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்ஆள் உடையது அரண். தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும். That is the real fortress which is filled with stores of every kind and which is garrisoned by loyal men that will make a brave defence. 747. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண். முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும். That is the veritable fortress which cannot be reduced whether by a regular siege or by storm or by treachery. 748. முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண். முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும். That is the veritable fortress which enableth the garrison to defeat the besiegers even when they exert their utmost against it. 749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண். போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். That is the veritable fortress which hath been rendered impregnable by works of various kinds, and which enableth the defenders to fell down their adversaries even at the outermost enceintes. 750. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும். But however strong a fortress may be, it will avail nothing if the defenders swho not vigour in action. பொருட்பால் ----------- IV கூழியல் அதிகாரம் - பொருள் செயல்வகை (The acquisition of wealth) 751. பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை. There is nothing like wealth to lend consequence to men of no consequence. 752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர். The indigent are treated with contempt by all: but every one exalteth the man of substance. 753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும். The unflickering light called wealth lighteth up all dark places unto him that possesseth it. 754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறள்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள். சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். Behold the substance that is acquired by means that are not evil: righteousness floweth therefrom and happiness also. 755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல். அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். Affect not the substance that is divorced from mercy and kindness, and touch it not with thy hands. 756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். Escheats and derelicts, customs duties, and prize acquired in war, all these contribute to build up the wealth of the prince. 757. அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும். Compassion which is the child of Love requireth for tending it the kindly nurse called Wealth. 758. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை. தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது. Behold the wealthy man who taketh an enterprise on hand: he is like one who watcheth an elephant-fight from the top of a hill. 759. செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல். ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. Amass wealth: for there is no sharper steel to cleave they foeman's pride. 760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும். Behold the man that hath laid up for himself wealth in great profusion by rightful means: both the other objects of life are easily within his reach. பொருட்பால் ----------- V படையியல் அதிகாரம் - படைமாட்சி (The characteristics of the army) 761. உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள்எல்லாவற்றிலும் சிறந்ததாகும். A well-organised and puissant army that feareth not danger in the first among the possessions of the prince. 762. உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது. It is only veterans that can hold out in desperate situations with grim determination, regardless of decimating attacks. 763. ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை? நாகம் உயிர்ப்பக் கெடும். எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும். What though they roar even like the ocean? An army of rats will be annihilated at a single whiff of the cobra's breath. 764. அழிவுஇன்றி அறைபோகாது ஆகி வழிவந்த வன்க ணதுவே படை. (போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சணைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும். That alone deserveth the name of army which knoweth no defeat, which is incapable of being corrupted, and which hath a long tradition of valour behind it. 765. கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும். That alone deserveth the name of army which can face valiantly even the God of Death if he should advance against it in all his fury. 766. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும். Valour, honour, decision in the midst of confusion, and devotion to the traditional principles of unblemished chivalry - these four are the armours of protection for an army. 767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும். That which deserveth the name of army always goeth for the enemy: for it is confident of overcoming him whenever he offereth battle. 768. அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பில் பெருமை பெறும். Superiority of armament may bring victory even though the army is lacking in dash or steadiness. 769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும். The army will always win provided that it is not inferior in numbers ,hath no implacable jealousies and hatreds, and is not left to starve without pay. 770. நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும். Even if there is no lack of troops of the line, there is no army when there are no chiefs to lead. பொருட்பால் ----------- V படையியல் அதிகாரம் - படைச்செருக்கு (The self-abandon of the warrior) 771. என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்! பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர். Face not my master in battle, O ye foes! for many are the men that challenged him in the past and are now only standing as stone statues. 772. கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. The javelin that is aimed at a tusker but misseth bringeth more glory than the arrow that is aimed at a hare and even hitteth. 773. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு. பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர். The furious courage that striketh hard, that is what they call valour: but it is chivalrous generosity to the fallen that giveth it its edge. 774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். கையில் ஏந்திய வேலை ஒரு யானையின்மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். The warrior hurled his spear at the elephant and was hurrying back to look for another: but he noticed the speak buried in his own body and smiled with joy as he plucked it out. 775. விழித்தகண் வேல்கொணடு எறிய அழித்துஇமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ? It is not a shame to the hero if his eye doth so much as wink when the lance is hurled at him? 776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். The hero counteth those days as wasted on which he receiveth not deep gashes on his body. 777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும். Behold the men that care not for their lives but yearn for the fame that encompasseth the earth about: the anklet that they wear round their foot is a very feast to the eye. 778. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். போர் வந்தால் உயிரின்பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். Behold the men of valour that fear not for their lives on the battle-field: they forget not their discipline even when their chief is severe upon them. 779. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்? தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்? Who hath the right to blame the men who lose their lives in the attempt to accomplish that which they have undertaken? 780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத்தக்க பெருமை உடையதாகும். If one can die so as to draw tears from the eyes of one's chief, one may even go a-begging in order to obtain for one self such a death. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - நட்பு (Friendship) 781. செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல் வினைக்குஅரிய யாவுள காப்பு? நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன? What is there in the world that is so difficult to acquire as friendship? and what other armour equalleth it as a defence against the machinations of foes? 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன. Like unto the waxing of the moon is the friendship of the worthy: but the alliance of fools is like the waning thereof. 783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். The friendship of the worthy is like the studying of great books: the more thou approachest them, the more charms thou wilt discover in them. 784. நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தல் பொருட்டு. நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். The object of friendship is not merry making: but the restraining and reproving of oneself when one goeth astray. 785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்புஆம் கிழமை தரும். நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். Constant meeting and companionship are superfluous: it is the union of hearts that maketh strong the bond of friendship. 786. முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும். Friendship is not the companionship that smileth to the face: it is rather the love that delighteth the heart. 787. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். That man alone is thy friend who turneth thee aside from wrong, directeth thee toward the right, and beareth thee company in misfortune. 788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதுஆம் நட்பு. உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. Behold the hand of the man whose garment hath been blown aside, how it hurrieth to recover his limbs: that is the symbol of the true friend that hasteneth to succour a man in his misfortune. 789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். Where doth Friendship hold her court? It is where two hearts beat in perfect unison and combine to life each other up in every possible way. 790. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்என்னும் நட்பு. 'இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்' என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும். There is beggary in the friendship that can be reckoned, though, it boasteth saying, Thus much do I love him and thus much he loveth me. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - நட்பு ஆராய்தல் (Testing of fitness for frienship) 791. நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின் வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு. நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை. There is no greater ill than making a friend without first testing him: for, once a friendship is formed, there is no giving it up for the man of heart. 792. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும். Behold the man that maketh men his friends without previously testing them: he courteth disasters which will only end in his death. 793. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு. ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும். Take into thy consideration the family of the man whom thou desirest to make thy friend, his virtues and his vices, and the whole range of his associates and connexions: and then befriend him. 794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும். Behold the man who is born of a good family and who dreadeth disgrace: one ought to acquire his friendship even by paying a price for it if necessary. 795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல். நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும். Look for the men who know the way of the wise and can reprove and chastise thee whenever thou go astray: and make them thy friends. 796. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும். There is a virtue even in misfortune: for misfortune is the rod wherewith one can measure the loyalty of friends. 797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். What is the greatest profit that can accrue to a man? It is a release from the friendship of fools. 798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு. ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். Resolve not upon enterprises that might dishearten thee by their failure: nor make the friendship of men who will abandon thee the moment thou art down. 799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை உள்ளினும் உள்ளம் சுடும். கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். The friendship of men that betray in the day of disaster would burn the heart that thinketh on it even at the moment of death. 800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். Cultivate with ardour the friendship of the pure: as to men that are unworthy of thee, discard thou their association even if it be by giving them a present. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பழைமை (Intimacy) 801. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும். That friendship is called intimacy which submitteth without resenting to all the freedoms taken by the beloved one. 802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு உப்புஆதல் சான்றோர் கடன். நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும். To be free and easy with each other, that is the heart of true friendship and it is the part of worthy men never to resent such familiarities. 803. பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை? பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்? Of what avail is friendship that is longstanding if it acquiesceth not in the liberties taken in its name? 804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயின். உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர். When friends rely on their intimacy and do a thing without leave, the warm-hearted will think of their love and will take it in good part. 805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின். வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். When friends do a thing that paineth thee, attribute thou it either to their feeling of perfect oneness with thee or to their ignorance. 806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார். The perfect friend giveth not up the friend of his heart even though he hath been the cause of his ruin. 807. அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர். Behold the man who hath loved dearly and long: he bateth not in his affection for his friend even though he cause him damage frequently. 808. கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின். பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும். Behold the men who refuse to listen to any imputations against the friend of their bosom: the day that he doth them an injury is a feast day into them. 809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். Behold the man who loveth another with a deathless affection: the whole world will hold him dear. 810. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். (தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர். Behold the men that alter not in their affection for their old friends: even enemies will look upon them with tenderness. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - தீ நட்பு (The friendship that injureth) 811. பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது. Behold the men who look as if they would eat thee up for very love, but who love thee not in their hearts: their friendship is sweeter in the waning than in the waxing. 812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன? Behold the unworthy wretches who would fawn on thee when it is to their profit and forsake thee when thou canst serve them no more: what mattereth it whether thou gain their friendship or lose it? 813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். Behold the men that calculate how much they can gain by a friend: they are of the same class with harlots and thieves. 814. அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது. There are men who are like the unbroken horse which throweth down its rider on the battle-field and gallopeth away: it is far better to be lonely than to have such men for friends. 815. செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும். Behold the vile men that forsake a trusting friend at the time of his need: it is better not to possess their friendship than to possess it. 816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார் ஏதின்மை கோடி உறும். அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். The enmity of the wise is ten million times better than the intimacy of fools. 817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். The hate of enemies is a hundred million times better than the friendship of boon companions and flatterers. 818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல். முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். Behold the men that will put obstacles in thy path while thou art engaged in an enterprise that thou canst accomplish: tell them not a word, but drop their friendship little by little. 819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும். Behold the men whose acts belie their spoken words: it is bitter to recall their fellowship even in dreams. 820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும். Behold the men that speak sweet in the closet but disparage in the assembly: do not approach them in any degree. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - கூடா நட்பு (False frienship) 821. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும். The friendship that an enemy pretendeth is only an anvil whereon to hammer thee when he seeth his opportunity. 822. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். Behold the men who look like friends but love not in their hearts: their friendship will alter even as the heart of a woman. 823. பலநல்ல கற்றக் கடைத்து மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை. Even if his studies are great and godly, it is impossible for an enemy to cast off the hate in his heart. 824. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும். முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும். Fear thou hypocritical ruffians that smile to the face but nurse their hatred within their bosom. 825. மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. Behold the men whose herats are not with thee: though their words tempt thee, place not the slightest faith in them. 826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். An enemy will be revealed in a moment though he speak the tender language of friendship. 827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது. Trust not an enemy though he bendeth low in his speech: for the bending of the bow forebodeth nothing but harm. 828. தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. Even in his joined hands the false friend will have a weapon concealed: not put thou more faith in his tears. 829. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று. புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச்செய்து அகத்தில் இகழ்கின்றவரைத், தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும். Behold the men that make much of thee in public but laugh thee to scorn in secret: humour thou them openly but crush them even in the embrace of friendship. 830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரீஇ விடல். பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும். When thou canst not yet break openly with a foe who pretendeth friendship for thee, feign thou also friendship to his face but keep him off from thy heart. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பேதைமை (Folly) 831. பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும். Dost thou want to know what folly is? It is the throwing away of that, which is profitable and the holding fast to that which is hurtful. 832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதையை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும். The chiefest among all kinds of folly is the folly of inclining the heart towards things that are unworthy and base. 833. நாணாமை நாடாமை நார்இன்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். The fool is neglectful of duties and rude, and callous to all sense of shame: and he will cherish nothing that ought to be cherished. 834. ஓதி உணர்ந்தும் பிறர் க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை. There is a man that is learned and subtle and a teacher of others, and yet continueth to be the slave of his passions himself: there is no greater fool than he. 835. ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். The fool hath the gift of bespeaking for himself in one birth a place in the slimy pit of hell even unto his seventh reincarnation. 836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேல் கொளின். ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால், (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். Behold the fool that taketh in his hand an enterprise of moment: he will not merely spoil it, he will qualify also for fetters. 837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை. பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர். If the fool should come by a great fortune it is strangers that will feast and his kindred will only starve. 838. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும். If the fool acquireth anything of value he will behave like a madman who is also grown tipsy. 839. பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதுஒன்று இல். பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரவு துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். Greatly delectable is the friendship of fools: one feelth no pangs when one parteth from them. 840. கழாஅக்கால பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. Even as is the placing of an unwashed foot on the couch, even so is the entrance of the fool in an assembly of men of worth. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - புல்லறிவாண்மை (Conceited folly) 841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. The veritable poverty is the poverty of sense: the world regardeth not other poverty as poverty. 842. அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். When a fool bestoweth a gift of his own free will, it is simply the good fortune of hte receiver and nothing else. 843. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும். The troubles that a fool bringeth down on his head, it is hard even for his enemies to cause him. 844. வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும். Dost thou want to know what is shallowness of wit? It is the conceit that sayeth to itself, I am wise. 845. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும். அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும். Behold the fool that pretendeth unto knowledge that he possesseth not: he raiseth doubts even as to those things that he really knoweth. 846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். Where is the good of the fool covering his nakedness, if the deformities of his mind are still left uncovered? 847. அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான். Behold the shallow man that cannot keep a secret to himself: he will bring down great calamities on his own head. 848. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய். தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். Behold the man who neither listeneth to good counsel nor knoweth for himself what is right: he is a plague to his fellows even unto the day of his death. 849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டான்ஆம் தான்கண்ட வாறு. அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். He that trieth to open the eyes of a fool is a fool himself: for the fool seeth but one way and that way is never wrong in his eyes. 850. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். Behold the man who denieth what all the world doth assert: he will be looked upon as an evil spirit walking the earth. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - இகல் (The defiant spirit) 851. இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர். The spirit of defiance is the peccant humour which developeth in all men the distemper called hate. 852. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது. Even when thy neighbour injureth thee with the deliberate purpose of picking a quarrel, even then it is best not to harbour vengeance or return the injury. 853. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்பநோயை நீக்கிவிட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும். The habit of picking quarrels with others is verily a grievous malady: if a man freeth himself from it, he will acquire everlasting glory. 854. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும். The highest joys will be within thy reach if thou reject from thy heart that greatest of evils, the defiant spirit. 855. இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே மிக்ல்ஊக்கும் தன்மை யவர். இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்? Who can desire the overthrow of the man who hath the talent to avoid hostilities? 856. இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம். Behold the man who taketh delight in breathing defiance against his neighbours: it will not be long before he doth stumble and fall. 857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார். Behold the prince of spiteful nature who is ever addicted to strife: he will be blind to the policy that advanceth nations. 858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்ல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும். The avoiding of strife leadeth unto prosperity: but if thou allow it to grow apace, ruin will not lag far behind. 859. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான். When fortune is about to smile on a man he will ignore all provocation: but when destiny hath decreed him ruin, he will set no bounds to his defiance of his neighbour. 860. இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம் நல்நயம் என்னும் செருக்கு. ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும். From defiance springeth all that is bitter: but good will yieldeth the glorious fruit of peace and harmony. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பகைமாட்சி (The characteristics of enemies) 861. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மைவிட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். Strive not with the powerful: but against those that are weaker than thyself carry on wars without relaxing even for one moment. 862. அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு? ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்? Behold the prince who is cruel, and who hath neither allies nor the strengtheth to stand alone: how is he going to withstand his enemy's forces? 863. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய் பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன். There is a prince that hath neither courage nor understanding nor liberality, and yet will not live in peace with his neighbours: he is an easy prey to his foes. 864. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். Behold the prince who is always ill tempered and who controlleth not his tongue: he will be an easy prey to everybody at all times and at all places. 865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது. ஒருவன் நல்வழியை நோக்காமல், பொுருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான். There is a prince who is tactless, who careth not for honour, and who neglecteth the science of politics and the things that it enjoineth: verily he is a joy unto his enemies. 866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படுிம். Behold the prince who is a slave to his lust and who loseth his reason in the blindness of rage: his enmity will be welcomed by his foes. 867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை. தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தா தவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். Behold the prince who undertaketh an enterprise but doth things that accord not with its success: verily one should seek his enmity even by paying a price for it if necessary. 868. குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடைணவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந் நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். If a prince hath no virtues and many vices he will have no allies and his enemies will rejoice. 869. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின். அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் நிற்கும். Enemies rejoice exceedingly when they get a fool and a coward to contend against. 870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. Behold the prince who careth not ever to fight aginst his foolish neighbour and obtain an easy victory: glory will reject him for evermore. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பகைத்திறம் தெரிதல் (The appraising of enemies) 871. பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது. The accursed thing called enmity should never be courted willingly even though it be only in jest. 872. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உருழவர் பகை. வில்லை ஏராக உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது. Even if thou challenge the men whose weapon is the bow, provoke not the men whose weapon is their tongue. 873. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிலில்லாதவனாகக் கருதப்படுவான். Behold the prince that hath no allies but challengeth to war a multitude of foes: he is more insane than even a madman. 874. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும். Behold the prince that hath the tact to convert enemies into allies: his power will last without end. 875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப் பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும். If thou hast to contend alone and without allies against two enemies try to gain over one of them to thy side. 876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும். Whether thou hast decided to make a neighbour thy friend or thine enemy, do not make him either when thou art embarrassed, but leave him alone. 877. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக்கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது. Reveal not thy troubles to men who know it not: neither expose thy weaknesses to thine enemies. 878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும். Form a wise plan, consolidate thy resources, and provide for thy defences: if thou do this, it will not be long before the pride of thy enemies is humbled to the dust. 879. இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும். Fell down thorn tree while yet they are young: for when they are overgrown they will themselves cut the hand that attempteth to fell them. 880. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர். Verily they shall not last long, those who humble not the pride of men who defy them. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - உட்பகை (The traitor in the camp) 881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாஆம் இன்னா செயின். இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றததாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும். Even groves and fountains give no joy if they breed disease: even so kinsmen too are an abomination when they seek one's ruin. 882. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். Fear not the foe that is like the naked sword: but beware of the enemy that cometh as a friend. 883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும். உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை மட்கலத்தை அறுக்கும் கருவிபோல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். Guard thyself against the secret enemy: for in the moment of embarrassment he will cut thee clean like the potter's steel. 884. மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும். மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும். If thou have an enemy that masqueradeth about as thy friend, his machinations would be many and he would end by corrupting even thy kindred. 885. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும். When a kinsman turneth traitor against thee, he will bring on thee a multitude of evils and jeopardise thy very life. 886. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது. When treachery invadeth the entourage of the prince, it is impossible that he fall not a prey to it one day or other. 887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார். The house that harboureth a traitor within its bosom is like a vessel that is fitted with a lid: it may not appear to be divided, but it will never make a united whole. 888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும். Behold the house that harboureth a traitor within its bosom: it will crumble to dust even like a piece of iron that is filled with a file. 889. எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும். Though the split be small even like a slit in a sesamum seed, ruin hangeth over the house that harboureth a traitor within its bosom. 890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று. அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது. Behold the man who mixeth on intimate terms with one who hateth him in his heart: he is like one dwelling in a hut with a cobra for his companion. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பெரியாரைப் பிழையாமை (Refraining from offending the great ones) 891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது. The greatest care of a man that looketh to his safety should be to guard himself carefully from offending those who can do all things. 892. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். If a man slighteth the great ones, their power will bring down on him miseries that can never be remedied. 893. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம். Dost thou seek thy annihilation? Then close thy ears to good counsel and offer provocation to men who have the power to destroy thee when they please. 894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது. Behold the feeble man doing an injury to men of might and power: it is as if he beckoned to the God of Death with his own hands to come to him. 895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது. Behold the men who provoke the wrath of princes of the mighty arm: wheresover they go they will not thrive. 896. எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது. Even men who are caught in a conflagratio nmay escape alive: but there is no safety for men who wrong the mighty ones. 897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்? தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்? Where will be thy life with its varied glories and thy wealth with all its splendour, if sages, strong in the strength of the spirit, are incensed against thee? 898. குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர். Behold the princes who look as if they are established on an everlasting foundation: even they will perish with all their kin if men who are mighty as the mountain but will their doom. 899. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான். Even the king of the Gods will fall from his place and lose his sovereignty if men of holy vows are incensed against him. 900. இறந்துஅமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்துஅமைந்த சீரார் செறின். மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது. Even kings who rest upon the most solid of supports will not be saved if men of great spiritual power frown on them. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - பெண்வழிச்சேறல் (Submission to wife government) 901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. Those that dote upon their wives will not attain to greatness: those that have the ambition to do great things turn away from such seduction. 902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத் தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும். Behold the man who hath an abject infatuation for his wife: his very affluence will be a by-word among men, and he will have to hide his face in shame. 903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும். The weakling who humbleth himself before his wife will always be ashamed to show his face before the worthy. 904. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறுஎய்தல் இன்று. மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. Behold the salvationless wretch that trembleth before his wife: his talents will never be held in any esteem. 905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. The man who feareth his wife will never have the courage to do a service even to the worthy. 906. இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள் அமைஆர்தோள் அஞ்சு பவர். மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர். Behold the men who stand in awe of the soft and tender arms of their wives: though they live like Gods no man will respect them. 907. பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது. Behold the man that submitteth to petticoat government: a bashful maid is more dignified than he by comparison. 908. நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர். மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார். Behold the men that allow themselves to be governed by their wives: they will not satisfy the wants of their friends, neither will they do anything that is good. 909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை. Behold the men that submit to petticoat government: neither righteousness nor wealth nor even the joy of love will be found with them. 910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை. Behold the men whose thoughts are set on great affairs and who are the favourites of fortune: they yield not to the folly of doting on their wives. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - வரைவில் மகளிர் (Prostitutes) 911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும். Behold the women that desire a man for the sake of his gold and not for the sake of love: their cajoleries will lead only to misery. 912. பயன்தூக்கிப் பண்புcரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்ற வாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். Behold the women who pretend love, but whose thoughts are ever fixed on their own profit: consider their ways and keep them at a distance. 913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில் ஏதில் பிணம்தழீஇ அற்று. பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது. The prostitute pretendeth love when she embraceth her lover: but in her heart she feeleth even as one who hath touched a stranger's dead body in a dark room. 914. பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய, சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார். Behold the men whose hearts are inclined to deeds of purity: they defile themselves not with the touch of harlots. 915. பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார். Behold the men who add deep study to a clear understanding: they defile themselves not with the touch of women whose charms are free to all. 916. தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்நலம் பாரிப்பார் தோள். அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார். Behold the men that have a regard for their own good: they touch not the hand of wantons who put up their lewd charms for sale. 917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சின் பேணிப் புணர்பவர் தோள். நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப் பொருந்துவர். Behold the men who are light hearted: they will seek the women who embrace with the body while their heart is somewhere else. 918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு. வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர். Behold the men who are devoid of understanding: the embraces of wily women are to them even as the fascination of the siren of the solitudes. 919. வரைவுஇலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். The soft arms of the well-decked harlot are the infernal pit wherein contemptible fools drown themselves. 920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். Women of two hearts, drink, and the dice table, these are the delights of men whom fortune hath forsaken. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - கள் உண்ணாமை (Abstaining from drinking) 921. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கள்காதல் கொண்டுஒழுகு வார். கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவர். Behold the men who are addicted to drink: they will never be feared by their enemies, and even the glory they have acquired they will lose. 922. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். Let none drink: but if they desire it, let those men drink who care not for the esteem of worthy men. 923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும்; அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்? The sight of the man who is intoxicated is an abomination even unto the mother that bore him: what must it be then to the worthy? 924. நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள். Behold the man who is addicted to the low vice of drunkenness: the fair one called Shame turneth her back upon him. 925. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்அறி யாமை கொளல். விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும். It is the veriest idiocy to spend one's substance and obtain in return only insensibility. 926. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர். உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். Behold the men who drink the poison called toddy day after day: they are as men that are asleep, neither do they differ from dead men. 927. உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர். Behold the men who drink in secret and pass their days in torpid insensibility: their neighbours will soon find them out, and hold them in utter contempt. 928. களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். கள்ளுண்பவன் 'யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்வதை விடவேண்டும்; நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும். Let not the drunkard pretend, saying, 'I know not even what it is to be drunk': for thereby he would merely add falsehood to his other voice. 929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது. Behold the man who argueth with one who is intoxicated and endeavoureth to convince him of the evils of drink: he is like a man who searcheth torch in hand one who is immersed under water. 930. கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ? The man who seeth while he is sober the drunken state of another man, cannot he picture to himself his own state when he is drunk? பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - சூது (Gambling) 931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது. Take not to gambling even if thou win: for they wins are even as the baited hook that the fish swalloweth. 932. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ? Behold the gamblers who lose a hundred where they gain but one: verily is there a way for them to thrive in the world? 933. உருள்ஆயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொுருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும். If a man bet over dice frequently, his substance will only go into the hands of strangers. 934. சிறுமை பலசெய்து சீரஅழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல். ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. Nothing bringeth on wretchedness so surely at gambling: for it killeth a man's good name and driveth his heart to every ignoble deed. 935. கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள்உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர். Many there have been who were proud of their skill in the throwing of dice and were mad after the gambling house: but there hath not been a single man of them all that did not come to grief. 936. அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும் முகடியால் மூடப்பட் டார். சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிய பல துன்பப்பட்டு வருந்துவர். Behold the men that are blinded by the Genius of Wretchedness who cometh in the form of a passion for gambling: they will starve and suffer every misery. 937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். If thou throw away thy time at the gambling house, thy inheritance will be consumed and they fair name will be wiped out. 938. பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற் கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். Gambling will consume thy substance and corrupt thy honesty: it will harden thy heart and bring on thee misery. 939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும். Glory, learning, and wealth will depart from the man who betaketh himself to gambling: nay he will have to beg for very food and clothing. 940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையாதாகும். The passion for gambling increaseth with the losses incurred in the bettings: even so doth the craying of the soul for life grow with the griefs that it suffereth therein. பொருட்பால் ----------- VI நட்பியல் அதிகாரம் - மருந்து (Medicine) 941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும். Every one of three humours described by sages, beginning with the windy one, would cause disease whenever they go to either extreme. 942. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். முின் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என் ஒன்று வேண்டியதில்லை. The body requireth no medicine if new food is eaten only after the old food is fully digested. 943. அற்றால் அறவுஅறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். Eat with moderation and after the food that thou hast taken is digested: that is the way to prolong thy days. 944. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும். Wait till the food that thou hast eaten is digested and thy appetite is keen: then eat moderately the food that agreeth with thy system. 945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. If thou eat abstemiously the food that doth not disagree with thy system thou will have no troubles in the body. 946. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பதுபோல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும். Even as Health seeketh the man who eateth only when his stomach is empty, even so doth Disease seek the man who eateth to excess. 947. தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோயளவு இன்றிப் படும். பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும். Behold the man who glutteth himself foolishly beyond the measure of his internal heat: his diseases will exceed all measure. 948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும். Consider the disease and its root and the means of curing it: and then set about the cure with every precaution. 949. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும் காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும். Let the physician take the measure of the patient as well as of the disease and let him take account of the season that is: and then let him set about the cure with every preacaution. 950. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து. நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. The patient, the physician, the medicine, and the apothecary, on these four doth all cure depend: and four again are the attributes of each of them. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - குடிமை (Respectability of birth) 951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. Rectitude and sensitiveness to shame come by nature only to men who are born of a good family. 952. ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். உயர்குடியல் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர். Men of gentle birth fall not from three things, namely, correct conduct, truth, and delicacy. 953. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர். Four are the attributes of the true gentleman: a smiling face, a liberal hand, sweetness of speech, and condescension. 954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. Men of a noble family would not tarnish their name even for the sake of tens of millions. 955. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் கருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை. Behold the men who come of ancient and noble families: they give not up their liberality even when their means of munificence are diminished. 956. சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார். Behold the men who are anxious to keep pure the honourable traditions of their family: they will never take to deceit nor descend to ignoble deeds. 957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும். The fault of a man of noble family will show conspicuously even as the sport in the face of the moon. 958. நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும். If rudeness of speech showeth itself in a man coming of a good family, people would even suspect the legitimacy of his birth. 959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும். The nature of a soil is known by the seedling that groweth therein: even so is the family of a man known by the words that come out of his mouth. 960. நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும். If thou desire virtue, thou must cultivate the sense of shame: and if thou want to honour thy family, thou must be respectful unto all. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - மானம் (Honour) 961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும். Forbear from those things that would lower thee, even though they should be indispensable for the very preservation of thy life. 962. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார். Behold the men that desire to leave an honoured name behind them: they will not do that which is not right even for the sake of glory. 963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவ வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். Cultivate modesty in the day of prosperity: but in the day of the decline hold fast to thy dignity. 964. தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். Behold the men that have soiled a name that was honourable: they are even as the locks of hair that have been shaven off the head and thrown away. 965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர். Even men who are grand as a mountain will look small if they do an ignoble thing, though it should be only of the measure of a kunri seed. 966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை? மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன? It bringeth not glory, neither doth it open the way unto heaven: why then doth a man try to live by fawning on men that despise him? 967. ஒட் டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. It is better for a man to die at once than to maintain himself by hanging on to those that scorn him. 968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து? ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ? Is the skin forsooth immortal, that men desire to save it even at the cost of honour? 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுிவிடுவர். The kavarima giveth up its life when it loseth its wool: there are men who are as sensitive, and they put an end to their lives when they cannot save their honour. 970. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள். Behold the men of honour who refuse to outlive their good name: the world will join its hands and worship at the altar of their glory. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - பெருமை (Greatness) 971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம். An aspiration for noble achievement, that is what is called greatness: and littleness is the thought that sayeth, 'I shall live without it'. 972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. The manner of birth is the same for all men: but their reputations vary because they differ in the lives that they lead. 973. மேல்இருந்தும் மேலஅல்லார் மேலஅல்லர் கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல் லவர். மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர். Even if they are noble, those that are not noble are not noble: and even if they are low-born, those that are not low are not low. 974. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமை பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும். Even as chastity in a woman, greatness can be maintained only by being true to one's own self. 975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர். Those that are great have the pussiance to employ adequate means and achieve things that are impossible for others. 976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. பெரியாரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை. It is not in the grain of small men to revere the great and earn their good will and favour. 977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின். சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும். If fortune falleth to the lot of the little minded, their insolence will know no bounds. 978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொள்ளும். Greatness is every unpretending and modest: but littleness vaunteth its merits before all the world. 979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்; சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும். Greatness showeth condescension unto all: but littleness is the very acme of insolence. 980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச சொல்லிவிடும். Greatness is always for screening the infirmities of others: but littleness will talk nothing but scandal. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - சான்றாண்மை (Worth) 981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். Behold the men that know their duties and want to cultivate worth in themselves: everything that is good will be a duty in their eyes. 982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. The worthiness of the worthy is the worthiness of their character: all other distinctions add nothing to their worth. 983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து, பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும். Love to all, sensitiveness to shame, complaisance, indulgence to the faults of others, and truthfulness, these five are the pillars that support the edifice of a noble character. 984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது. The virtue of the saint is non-killing: and the virtue of the worthy man is the abstaining from scandalous speech. 985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும். It is humility that is the strength of the strong: and that is also the armour of the man of worth against his foes. 986. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும். What is the touchstone of worth? It is the acknowledgement of superiority when it is found even in men who are otherwise one's inferiors. 987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்? Where is the superiority of the worthy man if he doth not do good even unto those that work him injury? 988. இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின். சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. Porverty is no disgrace to a man if he possesseth the wealth that is called character. 989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர். Behold the men that would not swerve from the path of rectitude even if all else should change in a general convulsion: they will be called the very palladium of worth. 990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை. சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால், இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும். Verily even the earth itself will not be able to support the burden of human life if the worthy were to fall from their worth. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - பண்புடைமை (Courteousness) 991. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர். Courteousness, they say, cometh easily to those who receive all men with open arms. 992. அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும். Humanity and good-breeding develop into the noble virtue of courteousness. 993. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும். It is not similarity of external marks that bind men together: it is uniformity of courteous behaviour that can weld them into a single body. 994. நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு. நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். Behold the men who love justice and righteousness, and who are of a helpful dispositio: the world setteth a high value on their manners. 995. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடுஅறிவார் மாட்டு. ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன. Disparaging words pain a man even when uttered only in jest: the well-bred therefore are never discourteous even to their foes. 996. பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும். The world goeth on smoothly because of the men of good-breeding: verily, but for them all this harmony would be dead and buried in the dust. 997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர். Though they are sharp as files, the men that are lacking in good manners are no better than mere wooden stocks. 998. நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும். Discourtesy is unbecoming in a man, even were it only against men who are unfriendly and unjust. 999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம். Behold the men who cannot smile: in al the wide, wide world they will see nothing but darkness even during the day. 1000. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று. பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியான கெட்டாற் போன்றதாகும். Behold the wealth in the hands of the churlish man: it is even as the milk that is spoiled for being kept in an unclean vessel. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - நன்றிஇல் செல்வம் (The wealth that is not put to good use) 1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. Behold the man who hath laid by in his home treasures in abundance but enjoyeth them not: he is as good as dead, for he maketh no use of them. 1002. பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிற்ப்பில்லாத பிறவி உண்டாம். Behold the miser that thinketh that wealth is all in all and hoardeth it without giving to any: he will be a demon in his next birth. 1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும். Behold the men that are always after hoarding but care not for fame: their existence is a burden unto the earth. 1004. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்? பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ? The man who careth not to earn the attachment of his neighbours, what doth he hope to leave behind him when he is dead? 1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை. Behold the men that neither gave unto others nor enjoy their wealth themselves: even if they own tens of millions they really possess nothing. 1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான். தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான். There is a man that enjoyeth not his wealth nor giveth freely to men of worth: he is an infliction and a bane unto a great fortune. 1007. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. பொருள் இல்லாதவறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகுபெற்றவன் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது. Behold the man that giveth not anything to the needy: the wealth in his hands is like a fair damsel that wasteth away her youth in loneliness. 1008. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று. பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது. The prosperity of the man that is not loved of men is like the fruiting of the poison tree in the midst of the village. 1009. அன்புஒரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே. Behold the man who thinketh not of righteousness and who pileth up wealth, by starving himself and his heart: his wealth is hoarded only for the behoof of strangers. 1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந் தனையது உடைத்து. புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது. The distress of the man of wealth who hath emptied his resources by benefactions is only like the exhaustion of the rain cloud: it will not continue for long. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - நாண்உடைமை (Sensitiveness to shame) 1011. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை. The blush of the worthy is for action that become them not: it is therefore quite different to the blush of the fair. 1012. ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும். Food, clothing, and progeny are common unto all men: it is in the sensibility to shame that they differ from one another. 1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லப்படும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது. The body is the seat of life for all: but a virtuous blush is the dwelling place of worth. 1014. அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல் பிணிஅன்றோ பீடு நடை. சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோற் அன்றோ? Is not the jewel of hte worthy their sense of shame? And when a man hath it not, is not his swagger an affliction unto the eye to behold? 1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும். Behold the men that blush others' disgrace as if it were their own: they will be called the very dwelling place of delicacy. 1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார். The worthy refuse to acquire even kingdoms save by means for which they would not have to blush. 1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவர்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார். Behold the men that have a delicate sense of honour: they would renounce their lives to save themselves from a disgrace, but would not swallow their same even in order to save their lives. 1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும். If a man blush not for those things that call forth a blush in others, Righteousness will have cause to blush for him. 1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாணின்மை நின்றக் கடை. ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும். By neglecting ceremonial observances a man loseth only his family: but every good is lost when he is lost to shame. 1020. நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று. மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருற்றதாக மயக்கினாற் போன்றது. The men that are dead to shame live not: they merely sham life even as wooden marionettes that are moved by strings. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - குடிசெயல் வகை (Advancing the family) 1021. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல். குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை. Nothing advanceth a man's family so much as his determination never to weary in labouring with his hands. 1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும். Manly exertion and a sound understanding: it is the fulness of these two that exalteth the family. 1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும். When a man setteth out saying, I shall advance my house, the very Gods gired up their loins and march before him. 1024. சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வர்க்கு அவர் ஆராயாமலேயே அச்செயல் தானே நிறைவேறும். Behold the men that remit not in their exertions to raise high their family: the work of their hands will prosper of itself even if they make no elaborate plans therefor. 1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். Behold the man that setteth his family on high without doing inequity: the whole world will be as kin unto him. 1026. நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்ஆண்மை ஆக்கிக் கொளல். ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும். That is the supreme manhood which bringeth to a high estate the family wherein one is born. 1027. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர் மேல்தான் பொறுப்பு உள்ளது. Even as the brunt of an action falleth on the courageous on the battle-field, even so the burden of keeping up the family lieth only on the shoulders of those that can bear the burden. 1028. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும். There is no season for them that desire the advancement of their family: if they take things easy or stand upon their dignity, their house will be brought low. 1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு? தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ? Verily, is the body of the man that would protect his family against every ill a receptacle for toils and hardships alone? 1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தஊன்றும் நல்ஆள் இலாத குடி. துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும். Behold the family that hath no goodman to prop it up: calamities will gnaw into its roots and it will fall to the ground. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - உழவு (Husbandry) 1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உலகம் பல தொாழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. Roam where they will, men must at last stand behind the plough for their food: in spite of every hardship, therefore, husbandry is the chiefest industry. 1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். Husbandmen are the linch-pin of society: for they support all those that take to other work, not having the strength to plough. 1033. உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுஉண்டு பின்செல் பவர். உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. They alone live who live by tilling the ground: all others but follow in their train and eat only the bread of dependence. 1034. பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர். நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடைநிழல்களையும் தம் குடையின்கீழ் காணவல்லவர் ஆவர். Behold the men whose fields sleep under the shadow of the rich ears of their harvests: they will see the umbrellas of other princes bow down before the umbrella of their own sovereign. 1035. இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது கைசெய்துஊண் மாலை யவர். கையால் தொழில்செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர் பிறரிடம்சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார். Behold the men that eat the bread of husbandry: they will not only not beg themselves, but they will also give alms to those that beg, without ever saying nay. 1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறுவிகளுக்கும் வாழ்வு இல்லை. Even they who have renounced all desire will have to suffer if the husbandman sitteth still with folded arms. 1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும். ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும். If thou dry the soil of thy field till an ounce of mould is reduced to a quarter-ounce of dust, then not even a handful of manure will be needed, and thy yield would be abundant. 1038. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு. ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது. Manuring profiteth more than the ploughing: and when the land is weeded, guarding it profiteth more than irrigation. 1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும். If the goodman visiteth not his land but sitteth at home, the land will take huff at him even as a woman. 1040. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும். எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள். The fair one called Earth laugheth to herself when she seeth the sluggard cry, saying, Alas I have nothing to eat. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - நல்குரவு (Penury) 1041. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது. வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். Wantest thou to know what is more galling than penury. Then know that penury alone is more galling than penury. 1042, இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும். Caitiff Indigence is an enemy to the joys of this life as well as to those of the next. 1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும். The itching that goeth by the name of Indigence killeth dignity of demeanour and refinement of speech, even though they run in the very blood. 1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும். Want will drive even men of high family to forget their dignity and to speak the language of abject servility. 1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பல வகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும். There are a thousand mortifications concealed underneath this one curse called poverty. 1046. நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும். The words of the indigent will carry no weight even when they expound grand truths with masterly skill and knowledge. 1047. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான். The poverty that is divorced from virtue will estrange even the mother that bore him from the side of the miserable wretch. 1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்). Is Indigence to bear me company even today? She tormented me but only yesterday even unto death. 1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித்தூங்குதல் அரிது. It is possible to go to sleep even in the midst of flames: but it is impossible to get even a wink of sleep in the midst of poverty. 1050. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும். The one way open to the indigent is to renounce utterly - their lives: their not doing so is but death to salt and rice-water. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - இரவு (Begging) 1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரனால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று. Thou mayest beg if thou seest men to help thee that can afford to do charity: if they feign inability, it is their fault, not thine. 1052. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும்இன்பம் என்று சொல்லத்தக்கதாகும். Even begging will be a pleasure if thou canst obtain that which thou beggest without having to submit to any humiliation. 1053. கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும். There is a charm even in begging, at the hands of those who understand their duty and do not falsely pretent inability to help. 1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது. Behold the man who sayeth not nay to a request even in a dream, begging at the hands of such a man is even as honourable as bestowing itself. 1055. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்நின்று இரப்பவர் மேற்கொள் வது. ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான். If men take freely to begging as a means of livelihood, it is because there are men in the world that refuse not alms. 1056. கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும். Behold the men that have not churlishness to deny charity: the pangs of poverty would cease at the very sight of them. 1057. இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து. இரப்பவர் எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும். Behold the men that give without snubbing or huffing the beggar: the heart of the beggar rejoiceth when he meetheth them. 1058. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. இரப்பவர் இல்லையானால் இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும். If there were none to beg for alms, the whole world would have no more meaning than a dance of marionettes. 1059. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை? பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்? Where would be the glory of liberality if there were none in the world to beg? 1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி. இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும். Let not the beggar scowl when a man pleadeth inability to give: for his own need should be enough to show him that another may be in like condition. பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - இரவுஅச்சம் (The dread of beggary) 1061. கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது. Tha man that beggeth not is ten million times worthier than he that beggeth, even though it be only at the hands of men that gie lovingly and with all their heart. 1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்! உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக! If He that made the earth intended that man should continue to live even when he is reduced to beg for his food, may He wander about the world and perish. 1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வன்மையின் வன்பாட்டது இல். வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை. Nothing is hardier than the hardihood that sayeth to itself, 'I shall put an end to my indigence by begging'. 1064. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. வாழ வழி இல்லாதபோதும் இரந்துகேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும். Behold the dignity that consenteth not to beg even when reduced to utter destitution: even the whole universe is too small to hold it. 1065. தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல். தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையாது வேறொன்றும் இல்லை. Though it is only gruel thin as water, nothing is more savoury than the food that is earned by the labour of one's hands. 1066. ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை. Even if what thou beggest is only water for the cow, nothing is so humiliating to the tongue to utter as a begging prayer. 1067. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று! இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்! Of all that beg I shall beg but this one thing: 'If needs ye must beg, beg not of those that shirk'. 1068. இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும். The haplessship called begging will split the moment that it striketh the rock of dodging. 1069. இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும். The heart melteth even when it contemplateth the lot of the beggar: but when it thinketh on the rebuffs that he receiveth, it simply dieth away. 1070. கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். இரப்பவர் 'இல்லை' என்ற சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ? Where doth the life of the dodger hide itself when he sayeth nay? At the mere sound of his rebuff the life of the beggar ebbeth away! பொருட்பால் ----------- VII குடிவியல் அதிகாரம் - கயமை (The degraded life) 1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்டது இல். மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. How they take after men, these degraded ones! Never have we seen likeness so exact! 1072. நன்றுஅறி வாரின் கயவர் திருவஉடையர் நெஞ்சத்து அவலம் இலர். நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால் கயவர் தம் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை இல்லாதவர். Happier than men of conscience are these despicable ones! For they never have any pangs of the heart to feel. 1073. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்ற வைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். Like unto very Gods are the base ones on earth! For they too are a law unto themselves. 1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் வைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். When the degenerate meeteth a reprobate, he would outdo him in his vices and pride himself on the achievement. 1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவ உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும். Fear is the only motive force of degenerates: if there is any other at all, it is appetite, and it availeth just a little. 1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர். Like unto a tomtom are the base ones; for they cannot rest without giving out to others the secrets that are entrusted to them. 1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதறமாட்டார். The degenerate would grudge even to jerk his hands moistened with food, save to those that can break his jaw with clenched fists. 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். அணுகிக் குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர். The worthy can be commanded by a simple word: but, like the sugarcane the low can be made to give only by a sound thrashing. 1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல் பொறாமையகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான். It is enough if he seeth a neighbour clothed and fed: the vile man can always discover vices in his character. 1080. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர். What is the resource of the degenerate when misfortune befalleth him? He hath but one, and that is to sell himself into slavery as quickly as possible. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - தகையணங்குறுத்தல் (The wound that beauty inflicteth he) 1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே! The jewelled form that appeareth yonder, is it the SIren of the solitudes? or a peacock fairer than its kind? or is it simply a lovely maid? Verily I am too dazed to tell. 1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்குஅணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. How would it fare with men if hte fascinating Siren of the solitudes assail them with a whole host behind her? So fareth it with me when the lovely one returneth my look. 1083. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனிஅறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு. எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. I never knew Death before: I know it now: it weareth the form of a woman and hath large and battling eyes. 1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. She is simple and gracious, but yet her eyes are versed in the ways of waging war: for they drink the lives of those that look on her. 1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது. Is it Death that I behold or simply eyes? or is it the look of the gazelle? for all three are to be found in the glance of this artless one. 1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர் செய்யல மன்இவள் கண். வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா. It is only when her eyebrows will cease to bend and will veil her looks that her eyes will cease to cause me the pangs that make me tremble. 1087. கடாஅக் களிற்றின்மேற் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது. The vestment that covereth the beauteous breasts of this fair one are even as the eye-cover on the eyes of the infuriate elephant. 1088. ஒள்நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே! Is it by her fair forehead that my manhood is overcome, the manhood that causeth to tremble even those that have not yet faced me on the battle-field? 1089. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ? To what end are these trinkets that merely man her beauty, when she hath the guileless look of the fawn and modesty as her especial ornaments? 1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே? Wine giveth joy, but only to him that tasteth it: it can never delight at the mere seeing as doth love. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - குறிப்பு அறிதல் (Reading of the heart by signs-he) 1091. இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து. இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும். Two are the looks of her surma painted eyes: one of them tortureth the heart but the other is the balm that healeth it. 1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதை விடப் பெரிய பகுதியாகும். The furtive lightning glance that is turned on the lover the moment that his eyes are turned aside, is not merely the half of love: it is more than a moiety. 1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலை குனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும். She looked, and then she bowed: that was the watering of the young plant of love that was springing up between us. 1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். When I look at her, she looketh at the ground: but when I look away, she looketh on me and softly smileth. 1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள். She doth not seem to see me, it is true: but verily I see joy surging up in her bosom in smiles the while she affecteth but to wink an eye. 1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும். Though they feign to speak as offended strangers, the words of the loving will be seen through in an instant. 1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும். The half-hearted reproach and the offended look are the marks of those who pretend to spurn but who really love us in their hearts. 1098. அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது. The slender-shaped maid melteth to see my imploring look and softly smileth: and the gently smile giveth her an added grace. 1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும். It is only in the eyes of those who love us that we can see the look of absolute unconcern, as if they were perfect strangers unto us. 1100. கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன. When eyes speak their consent to eyes, the words of the mouth are quite superfluous. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - புணர்ச்சி மகிழ்தல் (In praise of the union he) 1101. கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. All the delights of sight and sound and smell and taste and touch are to be found in their entirety only in this damsel of the shining bangles. 1102. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். The cure of all disease doth always lie in some other thing than that which causeth it: but the pang that this damsel causeth, she alone can heal. 1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ? Is the word of the lotus-eyed God sweeter than the tender arms of her that one loveth? 1104. நீங்கின் தெறூஉம் குறுகும்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்? When she is at a distance she burneth, but when she is near she is refreshingly cool: ah! whence did she obtain this strange fire? 1105. வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப்பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன. Behold the witchery of my love whose tresses are adorned with flowers! whatever thing my heart desireth, that very thing her form seemeth to me to be! 1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். Of ambrosia are the arms of my artless damsel formed: for their every touch reviveth my dying limbs. 1107. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்துக் கொடுத்து உண்டாற் போன்றது. The embrace of this lovely fair is supremely joyous, even as the family of life of the householder who eateth his portion only after disturbing charity. 1108. வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை போழப் படாஅ முயக்கு. காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும். Joyous to the loving pair is the embrace that alloweth not even the air to come between. 1109. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும். The pettish frown, the softening of the heart, and the new embrace, these are the sweets that lovers enjoy. 1110. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல், நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது. Even as a man feelth his ignorance that more keenly the more wise he groweth, even so do I love her the more ardently, the more I enjoy her company. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - நலம் புனைந்து உரைத்தல் (In praise of her beauty-he) 1111. நல்நீரை வாழி அனிச்சமே! நின்னினும் மெல்நீரள் யாம்வீழ் பவள். அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள். Soft are thou, O blest anicha flower! but tenderer than thyself is she on whom my heart is set. 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்! Thou becomest distracted whenever thou seest a flower, O my heart! Verily thou thinkest that the flowers that look on all men can resemble her eye. 1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு. மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண். Her arm is as the bamboo: her body is as the tender leaf: her smile is a berry pearl: the sweetest of odours is in her breath: and her painted eyes is piercing as the lance. 1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று. குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாபவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும். The sky-blue flower despaireth of ever equalling her eye in beauty, and droopeth down its head whenever it looketh on her. 1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா. She hath adorned herself with anitcha flowers but hath not removed the stems from them: alack, her waist will be crushed beneath the weight and will presently break! 1116. மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன. The stars of the heavens wander from their spheres for that they cannot tell which is the moon and which her face. 1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து. குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே! But is there a spot in the face of this fair one even as in the moon which hath rounded up only to-day its deformities of yesterday? 1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய். Bless thee, O Moon! If thou canst shine like the face of this lovely one, I shall love thee in very truth. 1119. மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி! திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே. If thou want, O Moon, to emulate the face of her whose eyes are like flowers, show not thyself unto all but shine alone for me. 1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை. Even the anitcha flower and swan's down are as nettle to the feet of this fair one. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - காதற் சிறப்பு உரைத்தல் (The glorification of love-he) 1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும். Even as honey and milk mingled together is the dew on the lips of this fair one with the subdued speech. 1122. உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. How great is the love between the body and the soul? Even so great is my love for this artless one. 1123. கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடு! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே! O thou Image in the pupil of mine eye! Leave thy place and give room to the fair one that I love, for there is no other abode that is worthy of her. 1124. வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்குச் சாவு போன்றவன். It is as life when she is near: but it is as very death when she leaveth my side. 1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். போர்ச செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே! Verily I can recall to mind the virtues of this maiden of the fair and battling eyes, provided first I can forget them: but how to forget them I know not! 1126. கண்உள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எங் காத லவர். எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர். He will not go from my eyes, neither will he be hurt when I wink: so subtle is the form of my beloved. 1127. கண்உள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார். ஆகையால், மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்! My beloved dwelleth ever within my eyes: so I do not paint them even, lest he should leave them even for an instant. 1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம். As my beloved is ever in my heart I fear to eat hot food lest it burn him there. 1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன்; அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லதவர் என்று சொல்லுவர். I wink not fear that I should lose sight of him even for that instant: and for this the village folk charge him with cruelty. 1130. உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துஉறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், 'அன்பில்லாதவர்' என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர். He dwelleth lovingly within my bosom and is never away from thence: and yet the village folk declare that he hath abandoned me, and call him cruel. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - நாணுத் துறவு உரைத்தல் (Overpassing the bounds of decorum-he) 1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல்அல்லது இல்லை வலி. காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை. To those who are torn from their loved one and suffer the pangs of separation there is no other resource left but the riding of the palmyra stalk. 1132. நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்து. (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன. Body and soul cannot support this anguish and have consented to ride the palm: they have trampled down all delicacy. 1133. நாணொடு நல்லாண்மை பண்டுஉடையேன் இன்றுஉடையேன் காமுற்றார் ஏறும் மடல். நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். Firmness of mind and delicacy I had formerly: but now I possess only the stalk of the palmyra that is ridden by the love-lorn lover. 1134. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றது. I put my trust on the raft that was built of firmness and delicacy: but the rushing stream of passion hath carried it along in its course. 1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள். This fair one who weareth tiny bracelets and who is tender as a flower, it is she that hath given me the palm-stalk and the anguish of eventide ! 1136. மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண். மடலூர்தலைப்பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. My eyes cannot sleep for thinking of that artless one: I shall ride that stalk therefore even in this late hour of the night. 1137. கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை. Nothing is more sublime than the self-restraint of the woman who would not ride the palm-stalk even when the passion of her heart is deep as the ocean. 1138. நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம் மறைஇறந்து மன்று படும். இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே! My Passion considereth not the strength of my modesty nor my kindness towards itself, and betrayeth my secret by showing itself abroad. 1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. அமைதியாய் இருந்ததால் எல்லாரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது. My Passion findeth that none taketh notice of it, and so it walketh up and down making an exhibition of itself in the public streets. 1140. யாம்கண்ணின் காண நகுப அறிவுஇல்லார் யாம்பட்ட தாம்படா வாறு. யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால், அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர். Fools laugh at me to my very face: for they have not felt all the pangs that I have felt. காமத்துப்பால் ----------- I களவியல் அதிகாரம் - அலர் அறிவுறுத்தல் (The public rumour-he) 1141. அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர். As the outery riseth in the village, life that had gone out of my limbs returneth back to me: it is my good luck that many do not know this secret. 1142. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர். மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். These village folk know not the rare virtues of my beloved with the flower-like eyes: for they have given her cheaply to me by raising this clamour. 1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை? அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொைருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. Is not the gossip of the village a precious things unto me? for even without obtaining her I feel as if I possess her already. 1144. கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். This clamour hath increased my passion for her: without it it would have been but a stale affair. 1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது. Even as every cup that is drunk but maketh the drunkard thirst for more, even so doth every discovery of his passion by others but increase its sweetness for the lover. 1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. Our meeting was but for one day: but the outcry that hath arisen over it is as when the serpent hath swallowed the moon! 1147. ஊரவர் கெளவை எருஆக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழிந்து வளர்கின்றது. The public talk is the manure, and the repoach of mother is the water, that unite to feed and prolong this anguish. 1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். அலர் கூறுவதால் காமத்மை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. To think of killing my passion by raising this clamour is like wanting to put out a fire by pouring ghee over it. 1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர் இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ? Is it for me to blush at this outcry now, when he who said 'Fear not' hath abandoned me to the scandal of every by-stander? 1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார். This clamour which I in my heart so much desire, the village rabble hath raised for me: verily my beloved will not refuse it me if I should beg it of him. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - பிரிவு ஆற்றாமை (The pangs of separation - she) 1151. செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப்பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல். If there is anything about not parting, speak it to me: but if it is only about thy quick return, tell it to those who will survive till then. 1152. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது; இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. His mere look was once a delight unto me: but now even his embrace saddeneth, for that I fear that he is to part. 1153. அரிதரோ தேற்றம் அறிவுஉடையார் கண்ணும் பிரிவுஓர் இடத்துஉண்மை யான். அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர் 'பிரியேன்' என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ? It is impossible to put trust in any, seeing that the thought of separation lurketh somewhere even in the heart of him who knoweth my heart. 1154. அளித்துஅஞ்சல் என்றுஅவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. அருள் மிகுந்தவராய் 'அஞ்ச வேண்டா' என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ? If he who bade me be of good cheer himself thinketh of parting from me, can I be blamed for having placed my trust in his solemn promise? 1155. ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. If thou wouldst save my life, O my maid, prevent the master of that life from going: for if he part from me, I fear I may not live to greet him on his return. 1156. பிரிவுஉரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதுஅவர் நல்குவர் என்னும் நசை. பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. When he hath the hardness to say to my very face, 'I shall depart', I give up all hope of his ever coming back to save my life. 1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ? Would not my close-fitting bracelets themselves, that have now slipped from my wrists, raise the bruit of the parting of my lord? 1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது. Bitter is life in a place where are no bosom friends: but bitterer far is separation from the beloved one. 1159. தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ. நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ? Hath fire, which burneth only when it is touched, the power, like love, to burn when it is far away? 1160. அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு, (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர். Many there are, are there not, who live through the pangs of leave-taking and of separation, and survive till the return of the beloved! காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - படர்மெலிந்து இரங்கல் (Bewailing the pangs of separation and pining away-she) 1161. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன்; அனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது. Behold, even now I smother my grief within me, but it only welleth up more and more even as the water of the live spring those who are draining it. 1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை; நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது. To conceal my grief is now beyond me: but as to disclosing it, I should feel it a shame to speak of it even to him that caused it. 1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து. துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன. At the two ends of the pole which is my life, my two loads of passion and delicacy hang heavy; and this helpless suffering body breaketh under their weight. 1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். காமநோயாகிய கடல் இருக்கின்றது; அதனால், அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை. There is a very sea before me in my passion for my beloved: but a trusty bark to cross it there is none for me. 1165. துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். (இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர், (துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவரோ? What will they not do when they are enemies, those who suffer one to pine away when they are friends? 1166. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடும்கால் துன்பம் அதனின் பெரிது. காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை, நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன். Vast as the sea is the joy that love yieldeth: but when it taketh to burning, the pangs it causeth are deeper far. 1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். காமம் இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது. I swim in the stormy sea of love, but I spy not any shore therefore even in the dead of night I am all alone and there is none to console me. 1168. மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்துஇரா என்அல்லது இல்லை துணை. இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமலிருக்கின்றது. Night in her mercy rocketh all life to sleep: and yet she hath none to help her through but me. 1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. (பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை. Night that passeth so slowly for me to-day is crueller in her cruelty to me than the cruel one himself. 1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை. If my eyes can run, even as my heart runneth, to where he is, they need not now be swimming in a sea of tears. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - கண் விதுப்பு அழிதல் (The wasting of the eyes through wistful longing) 1171. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்? Why do my Eyes complain to me to-day? This inconsolable grief hath come even upon me only through their showing to me my beloved. 1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப் பைதல் உழப்பது எவன்? ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? How is it that the Eyes that looked rashly on the beloved that day grieve to-day, instead of bearing patiently the consequences of their own folly? 1173. கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. They looked on him straightaway of their own free will that day, and to-day they weep of themselves: how they make themselves ridiculous! 1174. பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வுஇல்நோய் என்கண் நிறுத்து. என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டுி, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டுவிட்டன. After bequeathing to me the incurable grief that consumeth me, my Eyes have now dried up, having exhausted their store of tears. 1175. படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண். அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன. My Eyes which have brought on me this anguish vaster than the ocean, now pine away with grief and cannot even lay themselves to sleep. 1176. ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே! Oh, it is a sweet revenge to me that the Eyes that caused me this sorrow are victims themselves to the self-same anguish! 1177. உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்! அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருநதிக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்! Beshrew the eyes that hung upon his form on that day with a passionate, all-absorbing love! May they drup up to their very roots with pining and repining! 1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றுஅவர்க் காணாது அமைவில கண். உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை. Verily there be those who love without being loved! For here are my eyes which know no repose for not seeing him. 1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன. My Eyes sleep not when he is away, neither sleep they when he is returned: either way it is their lot to suffer unceasing pain. 1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதுஅன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப்போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று. When people's eyes themselves are tell-tale drums, even as my own, it is not hard for strangers to read the secret they seek to conceal. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - பசப்பு உறு பருவரல் (Bewailing the pallor of pining love) 1181. நயந்தவர்க்கு நல்காமை தேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற? விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்? It is I myself that consented to the parting of my beloved: to whom shall I complain now of my pallor? 1182. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு. அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலைநிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகின்றது. Pallor is proud of being his child, and so she creepeth all over my frame and rideth on me. 1183. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம் மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார். My comeliness and my modesty he hath taken away, giving in exchange therefore nought but the pangs of the heart and my pallid hue. 1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ? In my heart I think nought but his thoughts, with my tongue I speak nought but his praises: and yet, witchcraft! this pallor hath overspread my frame. 1185. உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்புஊர் வது. அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலைநிறம் வந்து படர்கின்றது. That day too he went but there, and paleness sought me out here! 1186. விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பசலை பார்த்துக் காத்திருக்கின்றது. Even as darkness lieth in wait for the light to be put out, even so doth Pallor lie in wait for my separation from my lord. 1187, புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு! தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவிவிட்டதே! I lay in his embrace: I then left him, and only for a very short while, but behold, pallor swallowed me up, as it were! 1188. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். 'இவள் பிரிவால் வருந்திப் பசலைநிறம் அடைந்தாள்' என்ற பழி சொல்வதே அல்லாமல், 'இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார்' என்று சொல்பவர் இல்லையே! These are people to reproach me saying, 'Behold she hath become sallow and pale': but there is none to reproach him for abandoning me! 1189. பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலைநிறம் அடைவதாக. Acquit him forsooth, my maid, of all harmful intent: the death-like pallor of my body is nothing to thee. 1190. பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமலிருப்பாரானால், யான் பசலை யுற்றதாகப் பெயரெடுத்தல் நல்லதே. It is good fo rme even to be twitted with the sallowness of my skin, if only they accuse not my beloved of cruelty. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - தனிப்படர் மிகுதி (Anguish of heart that the husband feeleth not as oneself) 1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர். They alone eat the stoneless all sweet fruit of love who are beloved of those whom they hold dear. 1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற் றுதலைப் போன்றது. What the rain is to all the world, that is the tendernesss of the beloved to her that loveth. 1193. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) 'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும். They alone can pride themselves on their happiness who are loved in return by those whom they love. 1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர். What if they are loved by others? If women receive not the affection of their beloved they know no happiness on earth. 1195. நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை? நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்? How can I hope for any favour from my beloved if he loveth me not even as I love him? 1196. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும். Even as the burthen on the carrying pole, love is pleasant only when it is on both sides: but it is a galling load when it is only on one side. 1197. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்ன்ஒழுகு வான்? (காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ? The God of Love assaileth only me: is it because he hath no eyes for my sorrows and sufferings? 1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல் வன்கண்மை உடையவர் இல்லை. None in the world can be so firm minded as women who continue to live on even when they receive no kind messages from their beloved. 1199. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாதலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றதுி. Even if the beloved is unkind to us, any message that cometh from him is sweet to the ear. 1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. நெஞ்சமே! நீ வாழிய! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக. Bless thee, my heart! Thou wouldst tell thy grief to one who loveth thee not: thou mayest as well try to dry up the sea. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - நினைந்து அவர் புலம்பல் (Sighing for the absent one) 1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. நினைந்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம் இன்பமானதாகும். Even in the recollection love is sweet with endless delights: love is therefore sweeter than wine. 1202. எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதுஒன்று இல். தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். The moment I recall the image of my loved one to my mind, that very moment all my sorrow is vanquished: ah, love is dear in all its aspects! 1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். தும்மல் வருவதுபோலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? I was about to sneeze, but the fit passed away: is it that he was about to think of me but did not? 1204. யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ? Have I at all a place in his heart? As for him, there is never a doubt but he abideth in mine. 1205. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்? தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஒயாமல் வருவதைப்பற்றி நாணமாட்டாரோ! He excludeth me jealously from his heart; is he not ashamed then to show himself caeaselessly in mine? 1206. மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்? It is but the recollection of our union that keepeth me alive yet: what else of life is there in me? 1207. மறப்பின் எவன்ஆவன் மற்கொல்? மறப்புஅறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். (காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆவேனோ? Even with my memory full of him, my heart burneth within me: what then will be my case if I should forget him? 1208. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு. காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங் கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ! How often soever I recall my beloved to my mind he will not be wroth with me: so much is the favour that my beloved bestoweth upon me! 1209. விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளிஇன்மை ஆற்ற நினைந்து. 'நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது. When my heart thinketh on his cruelty who once said, 'We are not two but only one life and soul', verily my life ebbeth away. 1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி! திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக! O Moon! set not in the horizon, I pray thee, till my eyes look again upon him who, abiding still within my heart hath yet parted from me. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - கனவுநிலை உரைத்தல் (In praise of the dream-state) 1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து? (யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்? What honours shall I do to the Dream which hath brought me a message from the beloved? 1212. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், (அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன். If only I could persuade my eyes to sleep, I would fly to my beloved in my dream, and tell him the story of how I manage yet to hold on to life. 1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டுஎன் உயிர். நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. If I am able to support life yet it is only because I see him in dreams who showeth not his face in waking hours. 1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. Dream giveth me all the joys of love: for it bringeth back to me my beloved who refuseth to pity me in my waking state. 1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது. முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்டபொழுது மட்டுமே இன்பமாக உள்ளது. The dream is full of joy so long as the beloved approach in it: and what more can be said of the waking state? 1216. நனவுஎன ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லா திருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர். Oh that there were no waking state! For then my dream would never be cut short and my beloved would never depart from me. 1217. நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது? நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்? The cruel one who pitieth me not while I am awake, why doth he haunt me in my dreams? 1218. துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார். He embraceth me while I am asleep and rusheth into my heart as soon as I open my eyes. 1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர். They reproach my beloved for that he doth not meet me to their knowledge: but then they see him not in dreams. 1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்ஊ ரவர்? நனவில் நம்மைவிட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்துப் பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ! These village folk say that he hath parted from me: is it that they see him not in dreams? காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - பொழுதுகண்டிரங்கல் (Sighing at the approach of evening-She) 1221. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்! Bless thee, O Evening! But who calleth thee Evening? Thou art really the hour that devoureth the lives of the wedded ones! 1222. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை? மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? Thou lookest melancholy and pale O Eventide! Pray, tell me dear, is thy lover also cruel even as mine? 1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். பனி தோன்றிப் பசந்த நிறம்கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. The dewy evening hour that once used to come trembling and sighing before me, now advanceth boldly, bringing nought but grief and despair unto my heart. 1224. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது (என் உயிரைக் கொள்ள) வருகின்றது. When the beloved is away, evening approacheth even as the executioner advancing t othe execution-ground. 1225. காலைக்குச் செய்தநன்று என்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை? யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன? What is the kindness that I had done to the morning hour? and how have I injured eventide? 1226. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை. Alack the day! I never knew the sting of the evening so long as my beloved was by my side. 1227. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி மாலை மலரும்இந் நோய். இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. This sickness buddeth in the morning, goeth on opening its petals the livelong day, and standeth fullblown at eventide. 1228. அழல்போலும் மாலைக்குத் தூதஆகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது. They call it the pipe of the shepherd, but verily it is a murderous weapon to me: for it ushereth in the evening that burneth me so. 1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப்போல் துன்பத்தால் வருந்தும். If evening that hath already driven me mad should advance any further, the whole town will be shrouded in sorrow before long, for I shall simply die. 1230. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். (பிரிவுத்துன்பத்தாால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுிதில் மாய்கின்றது. The life which is yet clinging on to me wlil soon depart: for eventide recalleth to me the image of him who is mad after wealth. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - உறுப்பு நலன் அழிதல் (The wasting away of her lovely form - the maid addresses her alone) 1231. சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன. My eyes think on him who left me saying that it was but to increase my happiness that he went, and are ashamed to show their face before flowers. 1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன. My lack-lustre eyes that are raining down tears look as if they would betray to others the unkindness of my beloved. 1233. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன. The arms that swelled with joy on the nuptial days now look as if they would proclaim his parting to all the world. 1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். துிணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டுவாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. The arms that lost their wonted comliness at the parting of the beloved are now grown so thin that their very bracelets slip off from them of themselves. 1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள், (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. The arms which have lost their wonted comeliness together with the bracelets that they were wearing, proclaim loudly to the world the cruelty of that cruel one. 1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். I chide my arms for growing lean and allowing the bracelets to fall off, as people now reproach him with cruelty. 1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து? நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படிகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ! Wouldst thou obtain glory, O my Heart? Then run to the cruel one and tell him of the bruit that hath arisen here from the wasting away of my arm. 1238. முயங்கி கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. As we were embracing each other one day, I but relaxed my arms a little, and the forehead of that artless one grew pale at once! 1239. முயக்குஇடைத் தண்வளி போழப் பசப்புஉற்ற பேதை பெருமழைக் கண். தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன. But a single breath of wind cut its way between us during our embrace, and the blood fled at once from her large eyes that are full even as the raincloud. 1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலைநிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது. Did the eyes grow pale only? They wept also at seeing the pallor of the fair forehead above. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - நெஞ்சொடு கிளத்தல் (Addressing one's own heart) 1241. நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்துஒன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து? நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ? Wouldst thou not think, O my Heart, and find out and tell me some remedy to cure me of this incurable disease? 1242. காதல் அவர்இலர் ஆகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே! Bless thee, my Heart! Thou are a fool to grieve for his absence when he hath no love for thee. 1243. இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே! பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். நெஞ்சே! (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே! What availeth our sitting here and pining away for thinking of him. O my Heart? He hat caused us this grief remembereth us not 1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன்கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. If thou go to him, my Heart, take these eyes also along with thee! For they devour me in their longing to look on him. 1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்? நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ? Though he spurneth us in spite of our cleaving unto him can we give him up as an enemy, my Heart? 1246. கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு! என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய். When thou lookest on the beloved who is clever in the art of conciliating my Heart, thou wouldst not even take huff but wouldst rush to his embrace, forgetting all: I fear that now too thy anger is only feigned. 1247. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் இரண்டு. நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. O my Heart, either give up love or give up bashfulness: for I am unable to support both of them at the same time. 1248. பரிந்துஅவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு! என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்யவில்லையே என்று ஏங்கிப் பிரிந்தவரின் பின் செல்கின்றாய்! நீ பேதை. Thou sighest because he would not return for pity sake, and wouldst go to seek him though he parted deliberately from thee: verily, thou hast on sense of self-respect, my Heart! 1249. உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு? என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்? Whom dost thou seek to join, O my Heart, when thou knowest that the beloved is seated within thy own self? 1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம். If we entertain any longer within our hearts the beloved that hath abandoned us we shall only waste ourselves away yet further. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - நிறை அழிதல் (The losing of the sense of a dignified reserve) 1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது. The door that is bolted with the bolt of modesty will yet yield to the axe of an overpowering love. 1252. காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது; அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது. Heartless is this thing called Love: for it oppresseth my heart even in the dead of night. 1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித் தும்மல்போல் தோன்றி விடும். யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது. I try indeed to shut my love up within my heart: but like a sneeze it breaketh out of itself without a warning. 1254. நிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறைஇறந்து மன்று படும். யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால், என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது. I was proud that I was correct and decorous in my behaviour: but alas! Love rendeth every veil and showeth itself in public. 1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதுஒன்று அன்று. தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று. The stren self-respect that refuseth to seek the beloved when he hath cruelly deserted, is a thing unknown to the love sick pair. 1256. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றுஎன்னை உற்ற துயர். வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்தக் காமநோய் எத்தன்மையானது? அந்தோ! How thou lovest me, O Grief! Thou wantest me to follow after him who hath dressed me cruelly! 1257. நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால், நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியமாலிருப்போம். If the beloved but favour us with his love, we at once forget all our reserve. 1258. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது பல மாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ? If is the subdued speech of that false one skilled in many a wily art, that breaketh through all the defences of our womanly decorum. 1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன். I wanted to go away in a huff: but I went and embraced him, for I saw that my heart had already joined him. 1260. நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல். கொழுப்பைத் தீயில் இட்டாற் போன்ற உருகும் நெஞ்சு உடைய என்னைப்போன்றவர்க்கு, 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஊடும் தன்மை உண்டோ? Can they ever think of refusing to be reconciled, whose hearts melt even as fat in the fire! காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - அவர்வயின் விதும்பல் (The longing of the lovers to meet) 1261. வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல். என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தேய்ந்தன. My eyes have lost their lustre and grown dull, and my fingers have worn away for counting of the days that I have noted on the wall. 1262. இலங்கிழாய்! இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. தோழி! காதலரின் பிரிவால் துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்துவிட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும். What if I forget today, my maid? My beauty hath already left me and my bracelet hath slipped off my arm. 1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வரதலைக் காணவிரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன். He parted from me longing for conquests: and if I live yet, it is for the longing of his return. 1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக் கோடுகொடு ஏறுமென் நெஞ்சு. முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின்மேலும் ஏறிப் பார்க்கின்றது. He gave my company up and parted without any regard to my feelings: and yet for the mere thinking of his speedy return my heart swelleth with joy! 1265. காண்கமன் கொண்கனைக் கண்ணார கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலைநிறம் தானே நீங்கி விடும். Only let my eyes take their fill of the sight of my beloved: pallor will then no more be seen on my wasted arm. 1266. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். Let my spouse but return home: and then in one day I shall drink the ambrosia of his presence and bid farewell to this wasting disease. 1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின்? என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரொடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ? When the beloved who is dear even as my eyes cometh home, shall I go into a huff for his long absence? or shall I embrace him? or shall I do both? 1268. வினைகலந்து வென்றக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம். May the prince begin the battle at once and triumph! And may I return in the evening and feast at home with my loved one! 1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. தொலையில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாகக்) கழியும். To those who count the days and yearn for the return of the beloved who is away, one single day will creep along with the slowness of seven. 1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துஉக்கக் கால்? துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்துவிட்டால், நம்மைத்திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றுவிட்டால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன? Of what avail will be my getting back or the meeting or even the hearty embrace, if the heart of my loved one be broken before then? காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - குறிப்பு அறிவுறுத்தல் (Reading the secret thought) 1271. கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதுஒன்று உண்டு. நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது. Thou mayest try to conceal, my love, but thy eye refused to be restrained, and telleth me that there is some strange thought in thy breast. 1272. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது. Ah! More than a women's reserve hath my artless one, whose beauty filleth my eyes and whose arms ar even as bamboo stems. 1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதுஒன்று உண்டு. (கோத்த) மணியுனுள் விளங்கும் நூலைப்போல் என் காதலியின் அழகினுள் விளல்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது. Even as the thread that is seen through the crystal head, there is a thought that is now pushing in her bosom, but which is yet plainly visible. 1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு. அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது. Even as the fragrance in the bud that is not yet blown, there is a secret meaning in the half-smile of this artless one. 1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து. காதலி என்னை நோக்கிச் செய்துவிட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது. The cunning with which she concealed her rising thought and left hath the charm to cure the anguish of my heart. 1276. பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிதுஆற்றி அன்புஇன்மை சூழ்வது உடைத்து. பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும். He is overkind and sweet to me: I fear there is something in his heart which he is hardly able to conceal: and it forebodeth to me a second departure. 1277. தண்அம் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே! My bracelet hath read the coolness in the heart of my gracious lord even sooner than my own self. 1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றேம். My beloved parted only yesterday: but it is seven days since my form hath lost its freshness! 1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு அவள்செய் தது. தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும். She looked at her bracelet and her tender arm and then she looked at her feet: these are the signs that she made to me. 1280. பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமலிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண்தன்மை உடையது என்று கூறுவர். She telleth me of the pangs of separation and prayeth for permission to accompany me if I go: how she surpasseth womanhood's self in delicacy to tell this only with her eyes! காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - புணர்ச்சி விதும்பல் (The impatience of the pair to fly to each other's arms) 1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. Rapture at the very thought and delight at the mere seeing belong not to wine: they belong only unto love. 1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். When love exceedeth even the measure of a palmyra tree, the desire to sulk can never enter the heart even to the extent of a millet seed. 1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை. Though he careth not for me and doth only as it pleaseth him, my eyes will not rest unless they behold him. 1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது. I wanted indeed to go away in a huff, my maid: but my heart forgot it and ran after union with the beloved. 1285. எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்துவிடுகின்றேன். Even as the eye seeth not the blackness of the pencil when it is being painted, even so I see no blemish in my beloved when he is near. 1286. காணும்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை. அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை. When he is before me I can see no faults in him: but when I see him not, I can see nothing in him but faults. 1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்துஎன் புலந்து. வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன? Who will jump into a stream knowing that it hath a treacherous under-current that will carry him away? and how should I take to sulking who know that I cannot hold on to it when he is near? 1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு. Wine is never unwelcome to the drunkard though it maketh him hang down his head in shame: even so is thy bosom to me, O false one! 1289. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே. Even tenderer than a flower in love: and few there be who know its delicacy and deal with it gently. 1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள். There were the sulks in her eye when she saw me: but when I approached, she flew to my arms even quicker than I myself to hers. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - நெஞ்சொடு புலத்தல் (Chiding the heart) 1291. அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது? நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? Thou seest how his heart serveth his will: then, how is it that thou obeyest not me, O my Heart? 1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு! என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! Thou seest, my Heart, how he neglecteth me, and yet thou consortest with him as if he were thy friend! 1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்? நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர்பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ? Thou followest him at thy own sweet will and pleasure, my Heart: dost thou also teach me that those who are unfortunate have no friends? 1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று? நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? Thou refusest to indulge in bouderie, my Heart, before showing they delight in his company: who is going thereafter to take thee as a confidence in such like things? 1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு. (காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. It feareth lest it should not get him, and when it hath got him, it feareth lest it should lose him: thus there is no end to hte pangs that my Heart suffereth. 1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது. What is my Heart good for? It is good for nothing else but to devour me when I am musing alone. 1297. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு. காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன். Fallen into the company of this foolish Hearth that knoweth not to preserve its self-respect by forgetting him, I have myself forgotten my dignity. 1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. My life of a Heart thinketh it a disgrace to our own selves if we humiliate the beloved: and so it is always partial to him. 1299. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி? ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்? Who will support a man in his grief, if the Heart of his beloved itself refuseth him help? 1300. தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய நெஞ்சம் தமர்அல் வழி. ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும். When my own heart is not on my side, is it a wonder that strangers care not at all for me? காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - புலவி (Bouderie) 1301. புல்லாது இராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. (ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. Embrace him not, my dear, but feign to be angry: let us just see a fun how he is nettled over it. 1302. உப்புஅமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவுகடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. Bouderie is the salt of love: to lengthen it unduly, however, is like adding too much of salt to food. 1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது. It is like wounding one anew who is already wounded, if thou come away without embracing her whom thou hast left in a pet! 1304. ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று. பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது. To come away without conciliating her who is frowning in a pet is like cutting off the roots from under the starving plant. 1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். The bouderie of the beloved hath an attraction for men who are spotlessly pure. 1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். If there were no frowns or pets on the part of the beloved, love would miss its fruits and its half-growns. 1307. ஊடலின் உண்டுஆங்குஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று. கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. There is a pain that belongeth unto bouderie: for one hath to ask oneself every minute whether reconciliation is near or yet a far way off. 1308. நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும் காதலர் இல்லா வழி? நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? Of what avail is my grieving when there is no loving one nigh to see how much I suffer? 1309. நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. Water is pleasant only in shady groves: and pettishness hath a charm only in one who loveth ardently. 1310. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. If my heart still yearneth for her who sootheth me not, it is due to nothing but foolish longing. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - புலவி நுணுக்கம் (The finesses of bouderie) 1311. பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்ப்பைப் பொருந்தேன். All that are women devour thee with their eyes, thou false gallant! I shall have none of thy embrace. 1312. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து. காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். I was in the sulks: he then sneezed, for he thought that I would bless him saying, 'Long live my beloved!'. 1313. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும் 'நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவரதற்காகச் சூடினீர்' என்று சினம் கொள்வாள். Even if I wear a garland she would go off in a pique saying, 'Thou wantest to look smart in some damsel's eyes!'. 1314. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 'யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னேனாக, 'யாரைவிட? யாரைவிட?' என்று கேட்டு ஊடல் கொண்டாள். I said to her, 'I love thee above all': and befold, she frowned at once asking, 'Above whom?' and above whom?'. 1315. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். 'இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்' என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். I told her, 'We shall never part in this life': alack, her eyes at once filled with tears! 1316. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். 'நினைத்தேன்' என்று கூறினேன்; 'நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர்?' என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். I said to her, 'I called thee to mind when away': and she that was about to clasp me to her arms went off in a pet saying, 'Thou hadst forgotten me then!'. 1317. வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று. யான் தும்மினேனாக அவள் 'நூறாண்டு' என வாழ்த்தினாள்; உடனே அதைவிட்டு 'யார் நினைத்ததால் தும்மினீர்?' என்று கேட்டு அழுதாள். I sneezed and she blessed: but then she recalled her blessing and asked with tearfilled eyes, 'Who thought on thee now, that thou sneezedest?'. 1318. தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள 'உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ' என்று அழுதாள். I repressed my sneeze: and then also she wept saying, 'Thou wantest to conceal from me that some of my friends are thinking on thee!'. 1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், 'நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர்' என்று சொல்லிச் சினம் கொள்வாள். Even if I exhaust all my arts to soothe her she will only frown harder saying, 'Thou hast practised well at others' bouderies!'. 1320. நினைத்துஇருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று. அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், 'நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்?' என்று சினம் சொள்வாள். Even if I look in rapture on her own charms, she will chide saying, 'To whose limbs now art thou comparing mine?'. காமத்துப்பால் ----------- II கற்பியல் அதிகாரம் - ஊடல் உவகை (The charm of bouderie) 1321. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானாலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்யவல்லது. Even if he is free from faults, it is only bouderie that giveth me a taste of his conciliatory grace. 1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்அளி வாடினும் பாடு பெறும். ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். Though the tenderness of the beloved hath to wait a little, there is a charm in the pinprick that we feel in being pettish. 1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீர்இயைந் தன்னார் அகத்து? நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ? Is there a higher heaven than bouderie, provided that the beloved is one with us, even as the water with the land whereon it floweth? 1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை. காதலரைத் தழுவித் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. In my very quarrel with my beloved lieth the engine that stormeth the defences of my heart. 1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்குஒன்று உடைத்து. தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்விருப்பம் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. Even when one is free from faults there is a delight when the arms of the beloved are withdrawn from one's clasp. 1326. உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. Sweeter is digestion than the meal: even so is the lover's quarrel sweeter than the embrace. 1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை, ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். It is the one who yieldeth first who is the winner in lovers' quarrels: thou canst see it indeed at the hour of reconciliation. 1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. நெற்றி வியர்க்கும்படியாகக் கூடுவதில் உளதாகும் இனிமையே, ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவேமோ? Verily, will she give some piquancy to the delights of our embrace by just feigning a quarrel for some time? 1329. ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்புமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. Oh, let me enjoy her frowning and her pouting a little more! Only let Night prolong her reign at my prayer. 1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின். காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். Bouderie is the charm of love: and the charm of that again is the sweet embrace at its close.